நொறுங்கிப்போன நயன்தாரா மாஸ்!.. எல்லா சூப்பர் ஸ்டார்களின் பார்வையும் இப்போ திரிஷா மேல தானாம்!..

அஜித்தின் பில்லா படத்திற்கு பிறகு நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாட ஆரம்பித்து விட்டனர். டூ பீஸ் உடையில் நச்சுனு வந்து நின்று நயன்தாராவை பார்த்து பலரும் சில்லறைகளை சிதற விட்டனர்.

அதன் பின்னர் பல பெரிய படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த நயன்தாரா படத்தின் மாயா படத்தில் உமன் சென்ட்ரிக் கதையை தேர்வு செய்து நடித்து மாஸ் காட்டினார். தொடர்ந்து டோரா, அறம் உள்ளிட்ட பல படங்கள் நயன்தாராவின் மார்க்கெட்டை உயர்த்தின.

GFjPUZ4awAAbGcm

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா:

அறம் திரைப்படத்தின் கலெக்டராக நயன்தாரா நடித்து உண்மையாகவே லேடி சூப்பர் ஸ்டார் இவர்தான் அந்தப் பட்டம் சரியாகத்தான் ரசிகர்களால் கொடுக்கப்பட்டுள்ளது என அனைவரும் கருதும் அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அஜித்துடன் விஸ்வாசம், விஜயுடன் பிகில், ரஜினிகாந்துடன் தர்பார் மற்றும் அண்ணாத்த என முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வந்த நயன்தாரா சமீப காலமாக கோலிவுட்டில் எந்த ஒரு டாப் நடிகருடன் ஜோடி போட்டு நடிப்பதில்லை. விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் மொத்தமாக எனக் கூறுகின்றனர்.

சரிந்த மார்க்கெட்:

நயன்தாரா சோலோவாக நடித்த நெற்றிக்கண், கனெக்ட், ஓ2, அன்னபூரணி எல வரிசையாக பல படங்கள் பிளாப் கொடுத்துள்ளன. மலையாளத்தில் பிரித்திவிராஜ் உடன் நடித்த கோல்ட் திரைப்படமும், தெலுங்கில் சிரஞ்சீவி வீடு நடித்த காட்பாதர் திரைப்படமும் நயன்தாராவுக்கு கை கொடுக்கவில்லை.

அதே நேரத்தில் பொன்னியின் செல்வன் 1, 2 மற்றும் லியோ என அதிரடியாக திரிஷா தனது மார்க்கெட்டை கோலிவுட்டில் உயர்த்தி விட்டார். மேலும் டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஐடென்டிட்டி படத்தில் நடித்து வரும் த்ரிஷா அடுத்ததாக தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜோடி சேர்ந்து பிரம்மாண்டமான படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

சிரஞ்சீவியுடன் திரிஷா:

விஷ்வம்பரா எனும் பெரிய பட்ஜெட் படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ள நிலையில், அந்தப் படத்தில் ஹீரோயினாக திரிஷா ஒப்பந்தம்ஆகியிருக்கிறார். சிரஞ்சீவியுடன் விஷ்வம்பரா படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா கலந்து கொண்ட காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

சில ஆண்டுகள் சைலன்ட் மோடில் இருந்து வந்த திரிஷாவுக்கு 96 மற்றும் பேட்ட உள்ளிட்ட படங்கள் மறுபடியும் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவகையாக நடித்து தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார் திரிஷா.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு விஜய் நடித்த லியோ படத்தில் ஹீரோயினாக நடித்த திரிஷா மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் அவர்தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் திரிஷா. கைவசம் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில், அதுவும் எல்லாமே டாப் ஸ்டார் படங்களாக உள்ள நிலையில் திரிஷாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.