மன்சூர் அலி கானை மன்னித்து விட்ட திரிஷா!.. ஒருவழியா ஒரு வார பிரச்சனைக்கு எண்ட் கார்டு போட்டாச்சு!..

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலி கான் ஆபாசமாக பேசிய கருத்துகளை பலர் எதிர்த்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டார். அதனை தொடர்ந்து இந்த சர்ச்சைக்கு தற்போது நடிகை திரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. அதற்கு மன்சூர் அலிகான் தரப்பில் அவர் எதுவும் தவறாகபேசவில்லை என்று தெரிவித்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்து நவம்பர் 23ம் தேதி நேரில் ஆஜராகுவதற்கு சம்மன் அனுப்பிய நிலையில், அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்தார். தேசிய மகளிர் ஆணயமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அனுப்பியது.

மன்னிப்பு கேட்ட மன்சூர் அலி கான்:

நேரில் ஆஜர் ஆகாததால் அவர் தலைமறைவாகிவிட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், மன்சூர் அலி கான் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு தொண்டை பிரச்சனை இருப்பதாகவும் இன்று குறிப்பிடும் நேரத்தில் ஆஜராவதாக கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நேற்று நேரில் ஆஜரான மன்சூர் அலிகான் தவறுதலாக பேசிவிட்டதாக கூறினார். மேலும், மன்னிப்பு அறிக்கையில், ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் என்றும் தனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்கானோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘அய்யய்யோ எனக்கும் வருத்தம்தான்’ என வந்துவிட்டேன்.

எனது இளமைக்காலத்தை சினிமாத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆர்வத்துடன் உழைக்க இறைவா சக்தியை கொடு! ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். பெண்ணிலிருந்து தான் ஆணும் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார் . இனிமேல் சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

மன்னித்த திரிஷா:

மன்சூர் அலிகான் திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக” என ஒரே பெரிய போடாக போட்டிருந்தார்.

இந்நிலையில், நடிகை திரிஷா இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து, தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது பெரிய மனித தன்மை என பதிவிட்டு மன்சூர் அலி கானை மன்னித்துள்ளார்.

trisha tweet

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.