நடிகை ஜெயலலிதாவை நேரில் சந்திக்க இவ்வளவு கண்டிஷன்களா? இதை பண்ணா மட்டும் தான் பாக்கவே முடியுமா?

இன்றைய தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் மாஸ் காட்டி வருகின்றனர். பல ஹீரோயின்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அவ்வபோது மாடல் போட்டோ ஷூட்டிங் புகைப்படம், அவர்கள் செல்லும் இடங்கள், அடுத்தடுத்த படங்களின் அப்டேட் என ரசிகர்களுடன் இணைந்து பயணித்து வருகின்றனர்.

ஆனால் அந்த காலத்தில் ஹீரோக்கள் ஹீரோயின்களை சந்திப்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் கதாநாயகிகளை சந்திக்க வேண்டும் என்றால் பல கட்டுப்பாடுகளை நாம் கடந்து தான் செல்ல வேண்டும். அதிலும் தமிழ் சினிமா கொண்டாடும் மிக முக்கியமான கதாநாயகிகளில் ஒருவர் ஜெயலலிதா. ஹீரோக்கள் மட்டுமே பிரபலம் அடைந்த காலங்களில் ஹீரோயின் ஆக தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நடிகை ஜெயலலிதா. இவர் எம்ஜிஆர், சிவாஜி, கணேசன் ஜெமினி கணேசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக எம்ஜிஆர் உடன் இணைந்து  பல திரைப்படங்கள் நடித்தது மட்டுமல்லாமல் இந்த இருவரின் ஜோடி பொருத்தம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் சாவித்திரி, பத்மினி, பானுமதி என திரையில் கலக்கிக் கொண்டிருந்த முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக திரைப்படங்களில் சாதனை படைத்த நடிகை தான் ஜெயலலிதா. அந்த காலத்தில் மாடல் உடையில் நடித்த முன்னணி நடிகையாக அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் தான் நடிகை ஜெயலலிதா. இத்தனை பெருமைக்குரிய நடிகை ஜெயலலிதாவை நேரில் காண்பது அவ்வளவு கடினமான விஷயம். அதற்கென பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பிரபலம் தனது பேட்டியில் தெளிவு படுத்தி உள்ளார். அது குறித்து முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகை ஜெயலலிதா தன் தொடக்க கல்வியை கான்வென்டில் படித்து முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம் என பல மொழிகள் சரளமாக பேசக்கூடிய திறமை ஜெயலலிதாவிடம் இயல்பாகவே அமைந்துள்ளது. இப்படி திரையுலகம் ஜெயலலிதா அவர்கள் சாதிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலத்தின் உச்சியை அடைந்தார். அவரின் வளர்ச்சியை பார்த்து அவர் மீது அனைவருக்கும் ஒரு பயம் கலந்த மரியாதையும் இருந்து வந்துள்ளது. அப்படி படப்பிடிப்பு தளத்திலும் யாராலும் ஜெயலலிதாவிடம் நெருங்கி உடனே பேசி விட முடியாது. நடிகை ஜெயலலிதா அவர்களும் படப்பிடிப்பில் தனது காட்சி முடிந்தவுடன் நாற்காலியில் உடனே அமர்ந்து விடுவார்.

அது மட்டுமல்லாமல் குனிந்த தலை நிமிராமல் புத்தகப் படிப்பில் ஆர்வமாக இருப்பார். அவரும் யாரிடமும் உரையாடுவதும் இல்லை, பிறர் உரையாடலை அவர் விரும்புவதும் இல்லை. இப்படி இருக்கும் ஜெயலலிதா பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது எப்படி நடந்து கொள்வார் என்பது குறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்களிடம் கேட்கப்பட்டது.

லோகேஷ் மற்றும் ரஜினி இணையும் தலைவர் 171 வது படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அந்த கேள்விக்கு பதில் அளித்த சித்ரா லட்சுமணன் கூறியது, நடிகை ஜெயலலிதா அவர்களின் பத்திரிக்கை சந்திப்பு என்ற போதில் பத்திரிக்கையாளர் வருவதற்கு முன்பாகவே ஜெயலலிதா அந்த இடத்திற்கு வந்து விடுவார் என்றும், அங்கு வரும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் டீ, காபி என வேண்டிய உபகரணங்களை செய்து கொடுத்து நல்ல மரியாதையாக நடத்துவது அவரது வழக்கம் என்றும் கூறியிருந்தார். காலதாமதம் என்பது அவரது வாழ்க்கையில் இல்லை என்றும் பெருமையாக தெளிவு படுத்தினார்.

இந்த உபசரணைகள் அனைத்தும் அவரிடம் அனுமதி வாங்கி செல்லும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி இல்லாமல் அவர் யாரையும் பார்ப்பது இல்லை என்றும் வெளிப்படையாக கூறினார். அனுமதி இல்லாமல் கலந்து கொள்ளும் யாரிடமும் அவர் உரையாடுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...