டிஎன்பிஎஸ்சி தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய AI Automation: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆகி வருவதை அடுத்து இனி வருங்காலத்தில் AI Automation என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு தேர்வாணையத்தின் மூலம் குரூப் ஒன் முதல் குரூப் 8 வரை தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதும் தெரிந்தது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த நிலையில் இன்னும் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதப்பட்ட நிலையில் பல மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாக அதை அடுத்து விண்ணப்பதாரர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இந்த மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ptr palanivel thiagarajan ptr 1628508965 1640860799 1643043375 1653406914 1661760647மேலும் tnpsc குரூப் தேர்வுகள் எழுதி பல மாதங்கள் கழித்து முடிவுகள் வருவதற்கு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் தான் என்று கூறப்பட்டது. பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையை மாற்றி புதிதாக AI Automation என்ற தொழில்நுட்பம் மூலம் விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

AI Automation தொழில்நுட்ப மூலம் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை மதிப்பீடு செய்தால் ஒரு சில வாரங்களில் தேர்வு முடிவுகள் அறிவித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்குள் AI Automation தொழில்நுட்பம் மூலம் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை திருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பல தேர்வுகளில் AI Automation தொழில்நுட்பம் முழம் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன என்றும் அதேபோல் தமிழகத்தில் இனி வருங்காலத்தில் AI Automation என்ற தொழில்நுட்ப மூலம் விடைத்தாள்கள் திருத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது விண்ணப்பதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews