படத்தின் பெயரே டைட்டில் சாங்காக வந்த சூப்பர்ஹிட் படங்கள்… என்னன்னு தெரியுமா?

தமிழ்ப்பட உலகில் பல பாடல்கள் ஹீரோவுக்கு ஓபனிங் சாங்காக வந்துள்ளன. ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி என பல முன்னணி நடிகர்களுக்கு வந்துள்ள இந்தப் பாடல்கள் மாஸ் ஹிட்டாகி விடும். இதில் விசேஷம் என்னவென்றால் படங்களின் பெயரைக் கொண்டே பாடல் ஆரம்பிக்கும். அவற்றில் ஒரு சில படங்களின் டைட்டில் பாடல்களைப் பார்ப்போம்.

விக்ரம்

உலகநாயகன் கமல் நடித்த படம் விக்ரம். 1986ல் வெளியான படம். ராஜசேகர் இயக்கிய இந்தப் படத்தில் கமல், சத்யராஜ், அம்பிகா, டிம்பிள்கபாடியா, லிசி, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா கம்ப்யூட்டர் இசையை முதன் முதலாகப் பயன்படுத்திய படம் இதுதான்.

இதன் டைட்டில் சாஙகை விக்ரம்… விக்ரம் என்று கமல் பாடுவார். இந்தப்பாடலின் இசை புதுப்பரிணாமத்தில் இருக்கும். செம மாஸான பாடல் இது. இந்தப் பாடலைக் கமலே பாடியிருப்பார்.

மனிதன்

1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் மனிதன். ரஜினிகாந்த், ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லிகணேஷ், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் சாங் மனிதன் மனிதன் இவன் தான் மனிதன்… மலேசியா வாசுதேவனின் குரலில் பாடல் பட்டையைக் கிளப்பும். சந்திரபோஸ் இசையில் பாடல்கள் எல்லாமே அருமை தான்.

தூங்காதே தம்பி தூங்காதே

1983ல் ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளியான படம். கமல், ராதா, சுலக்ஷனா, தங்கவேலு, வினுசக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ஆரம்பப் பாடலே களைகட்டும். தூங்காதே தம்பி தூங்காதே என்று கமல் கடையில் தூங்கிக் கொண்டு இருக்கும் ஒரு பையனைத் தட்டி எழுப்பிப் பாடுவார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருப்பார். செம மாஸான பாடல் இது.

வேலைக்காரன்

1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம். இது ஒரு காமெடி படம். ரஜினிக்குக் காமெடியும் வருமா என்று கேட்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினியுடன் சரத்பாபு, அமலா, வி.கே.ராமசாமி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டைட்டில் சாங்காக வேலையில்லாதவன் தான் வேலை தெரிஞ்சவன் தான் வீரமான வேலைக்காரன்…னு மனோ பாடி அசத்தியிருப்பார்.

வேலையில்லா பட்டதாரி

VIP
VIP

2014ல் தனுஷ் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இவருடன் அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா, பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் வேலையில்லா பட்டதாரி என டைட்டில் பாடலை இசை அமைப்பாளர் அனிருத் பாடி அசத்தியிருப்பார். 2014ல் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியானது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...