துலாம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

துலாம் ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 5 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். அர்த்தாஷ்டம சனியாக இருந்து தற்போது 5 ஆம் இடத்திற்குப் பெயர்வதால் பெரிய விசேஷமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். இருப்பினும் உடற்பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முதுகு மற்றும் மூட்டுவலி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே சிறிதளவில் இருக்கும்.’பிள்ளைகள் விஷயத்தில் கோபதாபங்கள் வேண்டாம்.

பிள்ளைகளிடம் பெற்றோர் போல் இல்லாமல் நண்பர்கள் போல் பழகுங்கள். நரசிம்மர் காயத்ரி வழிபாடு செய்துவந்தால் வாழ்க்கையில் நன்மை பயக்கும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். பயணங்கள் உங்களுக்கு மாற்றத்தினை ஏற்படுத்துவதாக இருக்கும்.

வீடு அமைப்பில் பெரிய அளவிலான மாற்றம் இருக்கும்; வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் வகையிலான மாற்றங்கள் நிறைந்ததாக வாழ்க்கை இருக்கும். இருப்பதைவிட்டாலும் கெட்டுப் போக மாட்டீர்கள்; உங்களுக்கு சனி பகவான் நற்பலன்களையே கொடுப்பார்.

கொடுக்கும் வாக்கினைக் காப்பாற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவர். தெய்வ யாத்திரைகள் மேற்கொள்ளுங்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறும், கடந்தகால கஷ்டங்களுக்கு விமோசனம் கிடைக்கும் காலமாக இருக்கும்.

சுப காரியத் தடைகள் விலகி, சுபச் செய்திகள் நடைபெறும். குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

தேவையற்ற மன உளைச்சல்கள், மன அழுத்தங்கள் குறையும். தாயின் உடல்நலனில் அக்கறை தேவை. உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது மன ஆரோக்கியம், தெம்பு, தைரியம் போன்றவை ஏற்படும்.

வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று வந்தால் வாழ்க்கையில் அனுகூலங்கள் ஏற்படும்.

வேலைவாய்ப்பு, தொழில் ரீதியான மாற்றங்களை பல ஆண்டுகள் கழித்துச் செய்வீர்கள். தைரியத்துடன் பல விஷயங்களை செய்து முடித்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.