துலாம் ஆனி மாத ராசி பலன் 2023!

துலாம் ராசி அன்பர்களே! ஆனி மாதத்தில் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக திறமைக்கேற்ற வேலையானது கிடைக்காத நிலையில் தற்போது அதற்கான முயற்சியில் மீண்டும் களம் இறங்குவீர்கள்.

தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவர். பிரிந்த நண்பர்கள் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒன்று சேர்வர். கணவன்- மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் சரியாகும்; புரிதல் மற்றும் அன்பு அதிகரிக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குழந்தைகளின் கல்விரீதியாகச் செலவுகள் ஏற்படும். ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் கஷ்டப்படுவீர்கள். இருப்பினும் மற்றொருபுறம் வீட்டின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

முறையான உடற்பயிற்சினால் உடல் ஆரோக்கியம்ரீதியாக இருந்த பிரச்சினைகள் சரியாகும். புது நபர்களுடன் நட்பு ஏற்படும்; ஆனால் சில முயற்சிகளைச் செய்ய முயல்கையில் தன்னம்பிக்கை குறைந்ததாக உணர்வீர்கள்.

பொருளாதார ரீதியாக எடுத்துக் கொண்டால் பணத் தட்டுப்பாடு சற்று மேலோங்கியே இருக்கும். தொழில்ரீதியாக எடுத்துக் கொண்டால் புதிய தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் அமையப் பெறும்.

வீடு, மனை சார்ந்த விஷயங்களில் விற்றல், வாங்குதல் போன்ற பிரச்சினைகள் சரியாகும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews