தக் லைஃப் படத்திற்கு பக்கா பிளான் ரெடி..! பிரபல தயாரிப்பாளர் சொல்லும் ஆச்சரிய தகவல்

மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் விறுவிறுப்பாகத் தயாராகி வரும் படம் தக்லைஃப். இந்தப் படத்திற்கான டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி பரபரப்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் சண்டைக்காட்சிகள் செம மாஸாக இருந்தன. தற்போது இந்தப் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கமலுடன் சிம்பு முதன் முறையாக இணையும் படமும் இதுதான். இந்தப் படத்தைப் பற்றிய சில தகவல்களை தயாரிப்பாளர் தனஞ்செயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தக்லைஃப் படத்தின் படப்பிடிப்பு கடும் வெயிலில் ராஜஸ்தான், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கிறது. சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதெல்லாம் சரியாக நடைபெற்றால் 50 சதவீதம் முடிந்து விடும். கமல், சிம்பு, நாசர் என பலரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தைப் பக்கா பிளானோடு எடுத்தார். அதுவும் 144 நாளில் கால்ஷீட் டைமிங் ஷெடுல் போட்டு பெர்பெக்டா எடுத்தது ரொம்பவே ஆச்சரியம். தினமும் காலை 4 மணிக்கு மேக்கப் மேன்கள் தயாராகி விடுவார்களாம். 7 மணிக்கு சூட்டிங் ஆரம்பித்து மாலை 6.10 மணிக்கு சரியாக முடிவடைந்து விடுமாம்.

அதனால் தான் இந்தப் படத்தை குறுகிய காலத்திற்குள் அவ்வளவு நட்சத்திரப் பட்டாளத்தையும் வைத்து எடுக்க முடிந்தது. இதை வேறு யாராவது எடுத்து இருந்தால் ஒரு வருடத்தையும் தாண்டி இருக்கும். இதெல்லாம் தாண்டி சிஜியும் பிளான் பண்ணி எடுக்க வேண்டும்.

Simbu, Kamal
Simbu, Kamal

இப்போது 65 வயதைத் தாண்டிய நிலையில் மணிரத்னம் கரெக்டா பிளான் போட்டு அல்டிமேட்டாக குறுகிய காலத்திற்குள் எடுக்கிறார். அதே போல தக்லைப் படமும் 65 நாள்களுக்குள் எடுத்து முடித்து விடுவார்கள். சிம்புவுக்கு மணிரத்னம் மேல் பெரிய அன்பும், மரியாதையும் உண்டு.

மணி சார் சூட்டிங்னா 7 மணிக்கு எல்லாம் வந்துவிடுவேன் என்று சிம்புவே சொல்கிறாராம். ஏன்னா மணிரத்னத்தைப் பொறுத்தவரை 7 மணி என்றால் அதே நேரத்தில் சூட்டிங் சரியாக நடந்துவிடும். மற்ற படங்களில் இப்படி நடக்காது. 7 மணிக்கு வரச் சொல்லிவிட்டு 10 மணிக்கு சூட்டிங் ஆரம்பிப்பார்களாம். இதனால் பல நடிகர்கள் விவாதம் பண்ணி விடுவார்களாம்.

அதனாலேயே காலதாமதமாகவும் வர ஆரம்பிக்கின்றனர். படப்பிடிப்பு குறிப்பிட்ட நாள்களுக்குள் நிறைவடையாமல் காலதாமதமாகி தயாரிப்பு தரப்புக்கு இடையே பிரச்சனை உருவாகி விடுகிறது. நம் நாடு படம் 24 நாள்களில் எடுத்தார்கள். பலே பாண்டியா 14 நாளில் எடுக்கப்பட்ட படம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews