இன்று இந்தக் கதையைக் கேட்டால் கோடி புண்ணியமாம்…!!! வரலட்சுமி விரதம் உருவான வரலாறு இதுதான்…!!!

கேட்ட வரங்களை மட்டுமின்றி கேட்காத வரங்களையும் கொடுப்பவள் மகாலெட்சுமி. பாற்கடலில் தோன்றிய செல்வங்களின் அதிபதியான லட்சுமிதேவியே பூலோக மக்களின் நன்மைக்காக சொன்ன கதை இது.

இனி வரலெட்சுமி விரதத்தின் வரலாறைப் பார்ப்போமா…

சௌராஷ்டிர மன்னன் பத்ரசர்மா தீவிர விஷ்ணு பக்தர். இவரது மனைவி சந்திரிகா. இவர்களுக்கு 7 ஆண் பிள்ளைகளும் ஒரு பெண்பிள்ளையும் இருந்தனர். பெண் குழந்தைக்கு சியாமா என்று பெயரிட்டு வளர்த்தனர். சந்திரிகா எப்பவும் தெய்வபக்தி, நல்லகுணம், கல்வி, கற்பு என தான தர்மத்தோடு இருந்தாங்க. கோப, தாபம் இல்லாம சாந்தமான குணத்தோடு இருந்தாங்க. அவங்களோட குணத்தைப் பார்த்து அவங்களுக்கு மகாலெட்சுமி ஆசி வழங்கலாம்னு நினைச்சாங்க. ஒரு துவாதசி வெள்ளிக்கிழமை தினத்தில் சுமங்கலி உருவத்தில் அந்தப்புரத்திற்குப் போயிருக்காங்க.

அன்னைக்கு சந்திரிகா வயிறு முட்ட சாப்பிட்டு வெத்தலப்பாக்கு போட்டுக்கொண்டு இருந்தாங்க. சுமங்கலி பெண்ணைப் பார்த்து சந்திரிகா அம்மா நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்னு கேட்கிறார். அதுக்கு அவள் சந்திரிகா நீ ரொம்ப நல்லவள் தான். லட்சுமி தேவி அவதரிச்ச துவாதசி…அன்னைக்கு விரதம் இருந்து லட்சுமிதேவியைப் பூஜிக்காம இப்படி வயிறாற சாப்பிட்டுருக்கியே இது நியாயமா? ஒரு சாதாரணப் பெண் எப்படி நம்மை இப்படி பேசலாம்…நான் இந்த நாட்டோட மகாராணி. என்னையே நீ கேள்வி கேட்குறிPயான்னு கோபப்பட்டு மகாலெட்சுமியோட கன்னத்தில அரைஞ்சிருக்காங்க.

varalakshmi 1
varalakshmi

சுமங்கலி உருவத்தில இருந்த மகாலெட்சுமி கண்ணுல கண்ணீரோடு அந்தப்புரத்தில் இருந்தாங்க. அப்போ சந்திரிகாவோட மகள் ஷியாமா ஏன் அழறீங்கன்னு மகாலெட்சுமியைப் பார்த்து கேட்டாங்க. அதற்கு லட்சுமி தேவி உங்க அம்மா என் கன்னத்தில அறைஞ்சிட்டாங்க. நீங்க என்ன சொல்ல வந்தீங்கன்னு ஷியாமா கேட்டாங்க. அதுக்கு நான் ஆடி வளர்பிறைக்கு முன்னால் வரக்கூடிய துவாதசி வெள்ளிக்கிழமை அன்று 16 வகையான செல்வத்தையும் வழங்கக்கூடிய லட்சுமியை நினைத்து பூஜித்து வான்னு சொல்றாங்க.

அப்போ திருமணம் முடிந்து வேறு வீட்டுக்குப் போற ஷியாமா மகாலெட்சுமி சொன்ன விரதத்தைக் கடைபிடிச்சி வாராங்க. பத்ர சர்மா மன்னன் செல்வசெழிப்பை இழந்து கொஞ்சம் கொஞ்சமா அவனோட குடும்பம் வீதிக்கு வருது. ஷியாமாவும் அவளது குடும்பமும் செல்வ செழிப்போடு வளர்ந்து வருது. பத்ரசர்மா மன்னனும் நாட்டை எதிரிக்கிட்ட இழந்து காட்டுக்கு வர்றாங்க. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட ஷியாமா அவங்கள தன்னோட நாட்டுல தங்க வச்சி ஒரு சேவகன் மூலமா உணவு அளித்து வர்றாங்க.

gold jug with coin 1
gold jug with coin

ஒரு நாள் ஒரு பாத்திரத்துல நிறைய தங்கக்காசுகளைப் போட்டு மூடி வச்சிக் கொடுத்துருக்காங்க. இதை வச்சி எங்காவது போயி பிழைச்சிக்குங்கன்னு தன்னோட அம்மா அப்பாட்ட கொடுத்துட்டு அந்த இடத்தை விட்டுப் போயிருக்காங்க. அப்போ பத்ர சர்மா மன்னன் அந்தப் பாத்திரத்தை எடுத்துப் பார்த்துருக்காரு. அதுல தங்கத்துக்குப் பதிலா கரித்துண்டுகள் இருந்துருக்கு.

அது ஏன்னு ஷியாமாக்கிட்ட கேட்க அப்போ தான் தன்னோட தாய் மகாலெட்சுமியை அவமதிச்சது தெரியவந்தது. உடனே வரலெட்சுமி விரதத்தைக் கடைபிடிக்கிற முறையை அம்மாவுக்கு சொல்லிக்கொடுத்துருக்காங்க. அவங்களும் மகள் சொல்லிக்கொடுத்த மாதிரி விரதத்தைக் கடைபிடிச்சி வந்தாங்க. நாளுக்கு நாள் அவங்க வீட்டுல செல்வம் பெருக ஆரம்பிச்சுது.

பத்ரசர்மா மன்னனின் மனதில் தைரியலட்சுமி குடியேறி தன்னோட ஆதரவாளர்களோடு நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றார். தன்னோட பெற்றோர் நல்ல நிலைமைக்கு வந்ததும் மகிழ்ச்சி அடைந்த ஷியாமா இந்த விரதத்தை மற்ற பெண்களுக்கும் எடுத்துக்கூறினார். அனைவருமே இந்த விரதத்தைக் கடைபிடிச்சதும் அந்த நாடே செல்வசெழிப்பா இருந்துருக்கு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews