தீபாவளி கொண்டாடப் படக் காரணம் இதுதான்!!

தீபாவளிப் பண்டிகையானது இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பண்டிகையாக இருக்கின்றது, பிறந்த நாளுக்கு துணி எடுக்காதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் தீபாவளிக்குப் புதுத் துணி எடுத்து கொண்டாடாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.

புதுத் துணி உடுத்தி, பட்டாசுகள் வெடித்து இனிப்பு வகைகள், உணவு வகைகள் போன்றவற்றினை இறைவனுக்குப் படைத்து என வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.

அத்தகைய தீபாவளி கொண்டாடப் படக் காரணம் என்ன என்று இப்போது பார்க்கலாம்.

இராமாயணத்தைப் பொறுத்தவரையில் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற இராமன், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன்  நாடு திரும்பிய நாளான அந்த தினமே தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

இதுவே இந்துக்களின் மற்றொரு புராண நூலான மகாபாரதத்தில் மக்களுக்குப் பெரும் துன்பம் கொடுத்துவந்த அசுரனான நரகாசுரனை கண்ணன் அவதாரம் எடுத்து வந்து  வதம் செய்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.

நரகாசுரனைக் கொள்ளவும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இதனைப் பார்த்தனர். அதாவது நரகாசுரனால் ஏற்பட்ட துன்பத்தில் இருந்து மீண்டதையடுத்து, எண்ணெய் தேய்த்து குளித்து புதுத் துணி உடுத்தி பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடினர்.

Published by
Staff

Recent Posts