மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்!.. இப்படியொரு ஆஃபர் கொடுத்திருக்கிறாரா?..

எதிர்ப்பாரத விதமாக இந்த ஆண்டு மலையாள சினிமாவுக்கு அதிர்ஷ்ட வருடமாக அமைந்துள்ளது. இந்த வருடம் தொடக்கத்திலிருந்து வெளியான பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரம்மயுகம் உள்ளிட்ட மலையாள படங்கள் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகின்றன.

மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து பாரட்டுகளை பெற்ற நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது.

ரஜினியை சந்தித்த மஞ்சுமெல் பாய்ஸ் டீம்:

இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீசி, காலித் ரகுராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுசுன் சியான் இசையமைத்துள்ள இப்படத்தில் குணா குகையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டதால் கண்மணி அன்போடு காதலன் பாடலையும் பயன்படுத்தியுள்ளனர்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் நண்பர்களில் ஒருவர் சாத்தானின் சமையலறை என சொல்லப்படும் பள்ளத்தில் விழுந்துவிடுகிறார், அவரை உடன் சென்ற நண்பர்கள் எப்படி மீட்கிறார்கள் என்பதை இரண்டு மணி நேரம் போனது கூட தெரியாமல் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டுள்ளார் இயக்குநர் சிதம்பரம்.

இப்படம் 2006ம் ஆண்டு குணா குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட உண்மையான நண்பர்களிடம் பல யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்து வருகின்றனர். அவர்களும் அங்கு நடந்த சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துக்கொண்டு வருகின்றனர்.

20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தற்போது 200 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. பிப்ரவரி 22ம் தேதி வெளியான இப்படம் ஒரு மாதங்களுக்கு மேல் திரையிடப்பட்டுவருகிறது. தெலுங்கில் இன்று டப் செய்யப்பட்டு மஞ்சுமெல் பாய்ஸ் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

இயக்குநருக்கு ஜாக்பாட்:

மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு அப்படத்தின் குழுவினர் சென்னை வந்து உலக நாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பாராட்டுகளை பெற்றனர். மேலும், நடிகர்கள் தனுஷ், விக்ரம், சிம்பு உள்ளிட்டோரையும் சந்தித்து பேசிய புகைப்படங்களும் வெளியாகின.

சமீபத்தில் சில 80ஸ் பாடல்கள் ஹிட்டாகி வரும் நிலையில் தற்போது கண்மணி பாடலும் இப்படத்தினால் வைரலாகி வருகிறது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைத் தொடர்ந்து ஆடு ஜீவிதம் படமே வெளியான நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் சந்தித்துள்ளனர்.

சென்னைக்கு அவர்கள் வந்தபோது சூட்டிங்கில் பிசியாக இருந்த ரஜினிகாந்த் தன் வீட்டிற்கு அழைத்து தற்போது பாராட்டியுள்ளார். அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் அடுத்து இயக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வாய்ப்பு இருந்தாலும் சொல்லுங்க பண்ணலாம் என ரஜினிகாந்த் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews