இந்தியாவிலேயே மிகப் பெரிய விநாயகர் சிலை இதுதான்!!

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டாலும், விநாயகர் சதுர்த்தி உருவான மாநிலமான மகாராஷ்டிராவில் கொண்டாடப்படும் முறை வித்தியாசமானதாகவும், மேலும் அதிக அளவில் அனைவரையும் கவரக்கூடியதாகவும் உள்ளது.

மகாராஷ்டிரா அடுத்தபடியாக விநாயகர் சதுர்த்தி விழா மிகக் கோலாகலமாக கொண்டாடும் மாநிலம் அதன் அருகாமை மாநிலமான ஆந்திர பிரதேச மாநிலத்தில் தான்.


மகாராஷ்டிராவினைப் போலவே ஒவ்வொருவரும் அவர்கள் வீடுகளி களி மண்ணால் செய்யப்பட்ட அல்லது மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து 10 நாட்களும் பழங்கள், கொழுக்கட்டை, சுண்டல் என 16 வகைகளைக் கொண்ட படையலைப் போட்டு பூஜை செய்கின்றனர்.

தங்கள் வீடுகளில் படைத்த படையலை அருகாமையில் உள்ள வீடுகளுக்கு கொடுத்து விழாவினை கொண்டாடி மகிழ்கின்றனர்.

வீதிகளில் வைத்து பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகள் ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் கரைக்கப்படுகின்றன.

6 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் கைர்தாபாத் கணேஷ் என்றழைக்கப்பட்ட 59 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது. இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக செய்யப்பட்ட மிக உயரமான விநாயகர் சிலை இதுதான்.

பார்ப்பதற்கே விநாயகர் கம்பீரமான தோற்றத்துடன் காட்சி கொடுத்தார், நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் அந்த விநாயகர் சிலையினை வந்து தரிசித்து சென்றனர், எந்த வருடமும் இல்லாத கூட்டம் அந்த வருடம் ஆந்திராவில் இருந்தது.

Published by
Staff

Recent Posts