ஜெய்பீம் படத்தில கண்ணுல மிளகாய்பொடி தூவுற காட்சியை இப்படித்தான் எடுத்தோம்… மணிகண்டன் பகிர்வு…

மணிகண்டன் தமிழ் திரைப்பட எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் பீட்ஸா 2 திரைப்படத்தின் மூலமாக எழுத்தாளராக அறிமுகமானார்.

பின்னர் ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘காதலும் கடந்துப் போகும்’, ‘8 தோட்டாக்கள்’, ‘விக்ரம் வேதா’ போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். இது தவிர பல திரைப்படங்களில் டப்பிங் பணியாற்றியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் ரஜாக்கண்ணு என்ற கதாபத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்த திரைப்படம் மணிகண்டனுக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதற்குப் பின் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மணிகண்டனை தேடி வந்தன.

இதையடுத்து 2023 ஆம் ஆண்டு மணிகண்டன் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘குட் நைட்’. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இந்த படத்தில் ‘நா காலி’ என்ற பாடல் பிரபலமானது. அடுத்து 2024 ஆம் ஆண்டு ‘லவ்வர்’ என்ற திரைப்படத்தில் மணிகண்டன் நடித்தார். இந்த படமும் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் நடிகர் மணிகண்டன் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்த ஒரு காட்சியைப் பற்றி பகிர்ந்துள்ளார். அந்த காட்சியில் போலீஸ், மணிகண்டன் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவுவது போன்ற காட்சி தான் அது. அதைப் பற்றி மணிகண்டன் கூறுகையில், அந்த காட்சிக்காக கண்ணை எரிச்சலூட்டி சிவப்பாக்கி கண்ணீர் வர வைக்க என்ன பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். கிளிசரின், சாக் பவுடர் எதை பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது , கேமராமேன் எதுவும் செய்ய வேண்டாம் கண்ணை விரிப்பது போல் மட்டும் ஷாட் எடுப்போம் மீதியை எடிட்டிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். அப்படிதான் அந்த காட்சியை எடுத்தோம் என்று பகிர்ந்துள்ளார் நடிகர் மணிகண்டன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...