நடிகர் சங்கத்துக்கு அடுத்தடுத்து குவியும் நிதி.. வாரிக் கொடுத்த நெப்போலியன்..

நிதிச்சுமையால் பாதிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டுமானப் பணிகள் தற்போது வேகமெடுத்து வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப் பட்ட பணிகள் இடையில் சில வருடங்கள் எந்த வளர்ச்சியும் இல்லாமல் அப்படியே நின்றது. காரணம் நிதிப் பற்றாக்குறை.

ஒரு படத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் சங்கத்துக்கு நிதிப் பற்றாக்குறை என்பது சற்று யோசிக்கத்தான் வைக்கிறது. இருப்பினும் பட்ஜெட் ஒன்றும் பிரம்மாண்ட தொகை கிடையாது. ஏற்கனவே 40 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டிருந்தது. மேலும் 25 கோடிகள் தேவைப்பட்ட நிலையில் தற்போது நடிகர்கள் பலர் வாரிக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆசையாய் மல்லிப்பூ கேட்ட மனைவி.. தோட்டத்தையே உருவாக்கிய பிரபல பாடகர்

இதில் முதலாவதாக தனது பங்களிப்பிலிருந்து ஆரம்பித்து வைத்தவர் உலகநாயகன் கமல்ஹாசன். தன் பங்குக்கு 1 கோடியை அள்ளிக் கொடுக்க, தொடர்ந்து உதயநிதியும் தானும் வருகிறேன் என அவரும் 1 கோடியை வழங்கினார். இதனால் மற்ற நடிகர்களுக்கும் ஓர் நம்பிக்கை பிறக்க, தளபதி விஜய்யும் 1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னால் இயன்ற பங்காக ரூ. 50 லட்சத்தை அளிக்க நன்கொடை வழங்கியவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த லிஸ்ட்டில் இன்னொரு நடிகரும் இணைந்துள்ளார். அவர் நெப்போலியன். நடிகர் நெப்போலியன் நடிகராக மட்டுமின்றி அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற சாப்ட்வேர் நிறுவனமும் நடத்தி வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன் மகனின் சிகிச்சைகாக அங்கே தங்கியிருக்கும் நெப்போலியன் அங்கு விவசாயமும் செய்து வருகிறார்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக தனது பங்களிப்பாக ரூ.1கோடியை வைப்புநிதியாக வழங்கியிருக்கிறார். இதற்காக நடிகர் சங்கம் சார்பில் பாராட்டியும், நன்றியும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர் நிர்வாகிகள். இவ்வாறு நடிகர்கள் பலரும் தன்னை வளர்த்த சினிமாத் துறைக்கு தங்களால் இயன்ற பணத்தினைக் கொடுத்து தென்னிந்த நடிகர் சங்கத்தின் கட்டுமானப் பணிகளுக்கும், வைப்பு நிதியும் வழங்கி வருகின்றனர். மேலும் நலிந்த கலைஞர்கள் பலரது வாழ்விலும் ஒளியேற்றி அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் கிடைக்க வழிவகை செய்து கொடுத்திருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...