கார்த்திகை திருநாளில் வீடுகளில் ஏற்றும் விளக்குகளின் எண்ணிக்கை முக்கியமா…? அதனால் என்னென்ன பலன்கள்..?

திருவண்ணாமலை என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தீபத்திருநாள் தான். மலை உச்சியில் கொப்பரை கொண்டு தீபம் ஏற்றுவது மிக முக்கியமான நிகழ்ச்சி. அங்கு தீபம் ஏற்றியதும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.

திருக்கார்த்திகை தீபத்திருநாள் 26.11.2023 (நாளை) அன்று வருகிறது. அன்று மதியம் 2.41 மணிக்குக் கார்த்திகை நட்சத்திரம் துவங்குகிறது. அன்று பௌர்ணமி திதியும் மாலை 3.58 மணிக்குத் துவங்குகிறது.

அதனால் தீபம் ஏற்றும்போது பௌர்ணமியும், கார்த்திகையும் ஒன்றாக வருகிறது. இது பரணி இரவில் இருந்து ஆரம்பித்து கார்த்திகை நட்சத்திரம் மாலை வரை நாம் கடைபிடிக்க வேண்டிய விரதம்.

கார்த்திகை மாதம் முழுவதுமே நாம் விளக்கேற்ற வேண்டும். அதில் திருக்கார்த்திகைக்கு முதல் நாள் ஏற்றுவது பரணி தீபம். 2ம் நாள் கார்த்திகை தீபம். 3ம் நாள் பாஞ்சராத்ர தீபம். இந்த 3 நாள்களுமே விளக்கேற்றுவது உத்தமம்.

எல்லா நாள்களுமே விளக்கேற்றுவது நல்லது தான். இருளை அகற்றுவது தான் ஒளி. நம்மைச் சுற்றிலும் பாசிடிவ் எனர்ஜியைக் கொண்டு வந்து சேர்க்கும். ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் அடிப்படையில் இந்த நாளில் விளக்கேற்றுவது சிறந்த யோகத்தைத் தரும். இந்த மாதத்தில் தியானப்பயிற்சியைத் துவங்கினால் மென்மேலும் சிறப்பு சேர்க்கும் என்றும் சொல்வார்கள்.

திருவண்ணாமலையில் அன்றைய தினம் மாலை 6 மணி அளவில சிவபெருமான் கோவிலுக்கு வெளியே  வந்து நமக்கு அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தருகிறார். மலையில் தீபமாக நமக்குக் காட்சி தருகிறார்.

Lord Muruga
Lord Muruga

அன்று காலையில் இருந்தே விரதத்தைத் தொடங்கலாம். பால், பழம் சாப்பிடுவது உத்தமம். காலையில் குளித்ததும் சிவபெருமானின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் சாத்தி வழிபடலாம். முருகப்பெருமானையும் இன்றைய நாளில் வழிபடலாம். ஏன்னா அவர் கார்த்திகை நட்சத்திரத்திற்கே சொந்தமானவர். இன்று மௌனவிரதம் இருப்பது ரொம்பவே நல்லது. காலை எழுந்தது முதல் இந்த விரதத்தை ஆரம்பித்துவிடலாம். மாலை 6 மணி வரை இருக்க வேண்டும்.

இடையில் தெரியாமல் பேசினால் ஓம் சிவாயநம, ஓம் சரவணபவ என்று சொல்லிவிட்டு மீண்டும் தொடரலாம். மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் ஆலயத்தில் தீபத்திருநாள் 10 நாள்கள் சிறப்புடன் நடக்கிறது. விளக்குகள், எண்ணை, நெய், திரி எல்லாம் தயார் பண்ணிக்கோங்க. நைவேத்தியத்துக்குப் பொரி, பழங்கள், வெத்தலைப்பாக்கு எல்லாம் தயாராக வைத்துக் கொண்டு டிவியில் இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

அப்போது திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளே இருந்து வெளியே வர நமக்கு சாமி தரிசனம் கிடைக்கும். அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷங்களைப் பக்தர்கள் முழங்குவார்கள். அப்போது தான் நம் விரதத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அதே நேரம் திருவண்ணாமலையின் உச்சியிலும் தீபம் ஏற்றுவர். அதைப் பார்த்து நாம் வழிபட வேண்டும். அதன்பிறகு தான் நாம் வீடுகளில் விளக்கேற்ற வேண்டும்.

Vilakku
Vilakku

வீட்டில் குறைந்தபட்சமாக 27 விளக்குகள் வைக்க வேண்டும். கிணறு, மொட்டை மாடி, கோட்டைச்சுவர்கள், மாடிப்படிகள் என வீட்டைச் சுற்றி நிறைய தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு. குழந்தைகள் தீபம் ஏற்றுவதற்கு சொல்லிக் கொடுக்கலாம்.

வாழ்க்கையில் கொஞ்சம் கூட வளர்ச்சியே இல்லாதவர்கள் அண்ணாமலையாரை நினைத்து இந்த விரதம் இருந்தால் நீங்களே நினைக்க முடியாத அளவுக்கு உயர்வை சிவபெருமான் கொடுப்பார். உயர்பதவி, நல்ல தொழில், நல்ல ஆரோக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை என பல சிறப்புகளைப் பெற்றுத்தரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews