பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் பொழுது இதையெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்!!!

பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டுதல் என்பது மிகவும் சவாலான விஷயமாக கருதப்படுகிறது. பல இளம் தாய்மார்கள் குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு வயதான பாட்டிகளையோ அல்லது அனுபவம் நிறைந்த பெரியவர்களையோ உதவிக்கு நாடுவது உண்டு. காரணம் கழுத்து சரியாக நிற்காத அந்த குழந்தைகளை கையாள்வது பலருக்கும் சிரமமான காரியமாக இருக்கலாம். உண்மையிலேயே குழந்தையை குளிப்பாட்டுதல் அவ்வளவு சிரமமான விஷயம் இல்லை. குழந்தையை சரியான நிலையில் வைத்துக் கொள்ள பழகிவிட்டால் நீங்களே எளிமையாக குழந்தையை குளிப்பாட்டி விடலாம். குழந்தையை குளிப்பாட்டும் பொழுது கீழ்க்கண்ட விஷயங்களை கவனிக்க தவறி விடாதீர்கள்.

baby bathing

1. குழந்தையை தினமும் குளிப்பாட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. குழந்தையின் தொப்புள் கொடி நன்கு காயும் வரை மென்மையான டவல் பாத் கொடுத்தால் போதுமானது. அதன் பிறகு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை குளிக்க வைத்தல் நலம்.

2. குளிக்க வைக்கும் முன் நல்ல சுத்தமான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் நல்லது.

கைக்குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா? எப்படி செய்வது???

3. சில பெரியவர்கள் குழந்தையை கொதிக்க கொதிக்க தண்ணீரில் குளிப்பாட்ட வேண்டும் என்று கூறுவார்கள். இது சரியான முறை அல்ல குழந்தை குளிக்கும் நீர் வெதுவெதுப்பாக இருந்தாலே போதுமானது.

4. பிறந்து சில வாரங்கள் ஆன குழந்தைகளுக்கு கடலை மாவு பாசிப்பயறு மாவு போன்றவற்றை தேய்த்து குளிப்பாட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மென்மையான அதிக வாசனைகள் இல்லாத பேபி சோப்பு பயன்படுத்தி குளிப்பாட்டலாம். குழந்தைகள் சற்று வளர்ந்த பிறகு குளியல் பொடி பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு மாவு ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன்படுத்த‌ கூடிய குளியல் பொடி…! இயற்கையான 10 பொருட்கள் வைத்து தயார் செய்வது எப்படி?

5. பிறந்த குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது அதன் கை கால்களை இழுத்து விடுவது, நாக்கில் படிந்துள்ள வெண்மையை எடுக்கிறேன் என்று செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டியது இல்லை.

baby 4018907 1280

6. குழந்தைகளை குளிக்க தயார் செய்யும் பொழுது அவர்களுக்கு தேவையான பொருட்களை முன் கூட்டியே எடுத்து வைத்து விட்டு அதன் பின் குளிக்க வைக்கலாம்.

7. குழந்தையை குழந்தைக்கு என்று உரிய பாத் டப்பில் குளிக்க வைக்கிறீர்கள் என்றால் ஐந்து சென்டிமீட்டர் அளவிற்கு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நலம்.

8. கால்களை நீட்டி அதில் குழந்தையை கிடத்தி குளிக்க வைக்க விரும்புகிறீர்கள் என்றால் முதலில் குழந்தையை குப்புற படுக்க வைத்து முதுகு உள்ளிட்ட பின்புற பகுதிகளுக்கு சோப்பு போட்டு கீழே விழுந்து விடாமல் பிடித்து குளிக்க வையுங்கள். அதன் பின் முன்புறம் திருப்பி வயிறு, தொடை, பிறப்புறுப்பு ஆகிய பகுதிகளை கழுவுங்கள்.

9. முகத்திற்கு அதிகம் தண்ணீரை ஊற்றாதீர்கள்.‌ கைகளில் தண்ணீர் எடுத்து முகத்தை துடைத்து சுத்தம் செய்தால் போதும்.

baby 1651161 1280

10. குழந்தையின் ஈர உடலை மென்மையான டவல் கொண்டு மிருதுவாக துடைத்து விடுங்கள் அழுத்த வேண்டாம்.

11. குழந்தைக்கு மூச்சு திணறும் அளவுக்கு பவுடரை அடித்தலும் தேவை அற்ற செயல்.

பெரும்பாலும் குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது கத்தி அழுவார்கள் உண்மையிலேயே குளியல் நேரம் குழந்தை மகிழ்ச்சியுடன் ரசிக்க வேண்டிய நேரம் அழ வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் குழந்தை அழாமல் குளித்தால் நீங்கள் சரியான முறையை கையாள்கிறீர்கள் என்று அர்த்தம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews