குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன்படுத்த‌ கூடிய குளியல் பொடி…! இயற்கையான 10 பொருட்கள் வைத்து தயார் செய்வது எப்படி?

பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர் வரை அனைவருமே குளிப்பதற்கு சோப், பாடி வாஷ் என பல்வேறு கெமிக்கல் பொருட்களை தினமும் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். கெமிக்கல் பயன்பாட்டின் தீமை உணர்ந்து சிலர் இப்பொழுது இயற்கையான பொருட்களை கொண்டு குளியல் பொடி பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள். ஆனால் சிலர் இயற்கையான குளியல் பொடி தயாரிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் மிகவும் கடினமாக இருப்பதாக உணர்கிறார்கள்.

baby 4018907 1280

இயற்கை முறையில் செய்யக்கூடிய குளியல் பொடி தயார் செய்வது சற்று சிரமமாக தோன்றினாலும் ஒரு முறை தயாரித்து வைத்துக் கொண்டால் மாதக்கணக்கில் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மேலும் குளியல் பொடி பயன்படுத்துவதால் சருமத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.

குளியல் பொடி செய்ய தேவையான பொருட்கள்:
  1. பாசிப்பயறு – அரை கிலோ
  2. கடலைப்பருப்பு – அரை கிலோ
  3. பூலாங்கிழங்கு – 10 கிராம்
  4. கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்
  5. பன்னீர் ரோஜா இதழ் – 50 கிராம்
  6. பாதாம் பருப்பு – 10
  7. ஆவாரம் பூ – 50 கிராம்
  8. வெட்டிவேர் – 10 கிராம்
  9. வேப்பிலை – 30 கிராம்
  10. துளசி – 30 கிராம்
குளியல் பொடி செய்யும் முறை:

images 3 1

மேலே உள்ள பொருட்களை  தனித்தனியாக வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.

ரோஜா இதழை மட்டும் நிழலில் காய வைத்துக் கொள்ளலாம்.

இதழ்கள் மற்றும் இலைகள் கைகளில் பிடித்தால் நொறுங்கும் படி இருக்க வேண்டும் அந்த அளவிற்கு நன்கு காய வேண்டும்.

இவை காய்ந்த பின்னர் மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

ஆண் குழந்தைகளுக்கு கஸ்தூரி மஞ்சளை தவிர்த்து விட்டு மற்ற பொருட்களை மட்டும் பயன்படுத்தலாம்.

அரைத்த பின் மாவினை நன்கு சலித்து அதன் பின் குழந்தைகளுக்கு பயன்படுத்துவது நல்லது.

குளியல் பொடி பயன்படுத்தும் முறை: 

baby 1651161 1280

குழந்தைக்கு தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கொண்டு உடலை நன்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பிறகு இந்த குளியல் பொடியை ஒரு பவுலின் சேர்த்து பசும்பால் அல்லது தண்ணீர் சேர்த்து குலைத்து குழந்தையின் உடல் முழுவதும் நன்கு தேய்த்து குளிக்க வைக்கலாம்.

பெண்களே… உங்க வீட்ல பால் இருக்கா? அப்போ பார்லரே செல்ல தேவையில்லை…!

குளியல் பொடியினால் விளையும் நன்மைகள்:

வேப்பிலை, துளசி போன்றவை சருமத்திற்கு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது.

சருமத்தில் இயற்கையாகவே உள்ள எண்ணெய் சத்தினை பாதுகாத்து சருமம் வறண்டு விடாமல் காக்கிறது.

வியர்க்குரு வராமல் சருமத்தினை பாதுகாக்கிறது.

இதில் ரோஜா இதழ் மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றில் உள்ள விட்டமின் சி சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்திடும். மிகவும் மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

வெட்டிவேர் மிகச் சிறந்த கிருமி நாசினி ஆகும்.

கருமை படிவதை தடுத்து விடுகிறது.

பூலான் கிழங்கு, ஆவாரம் பூ மற்றும் கஸ்தூரி மஞ்சளும் நல்ல நிறமூட்டியாக விளங்குகின்றன.

பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாய் இந்த குளியல் பொடி அமையும்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews