தினமும் ஜெபம் செய்பவரா நீங்கள்?! அப்ப இதை கவனத்தில் வைங்க!

தினமும் மனதை ஒருநிலைப்படுத்தி, தனக்கு பிடித்த கடவுளை நோக்கி மந்திரங்களை சொல்லி வழிபடுவது வழக்கம். சிலர் கடவுளை நோக்கி , ஜெபம் செய்வர். ஜெபம் என்றால் என்ன?!ஜெபம் என்பது நாம் இறைவனுடனும், இறைவன் நம்முடன் பேசும் ஒரு வழிமுறை ஆகும். அது ஒரு வழிச்சாலை அல்ல,இருவழிச் சாலை. நாம் பேச அவர் பேச இருவரும் உரையாடி மகிழும் ஒரு இனிமையான தருணமாகும். அவ்வாறு ஜெபிக்கும்போது எந்த திசையை நோக்கி நாம் அமர்ந்திருக்கிறோம் என்பதை பொறுத்து அதற்கேற்ற பலன்கள் கிட்டும்..

கிழக்கு நோக்கி ஜெபம் செய்தால் அடுத்தவரை வசீகரிக்கும் ஆற்றல் கிட்டும்…                                                                                                  தென்கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபம் செய்தால் நோய் தீரும்…
தெற்கு நோக்கி அமர்ந்து ஜெபம் செய்தால் பெரும் தீமை உண்டாகும்..
தென்மேற்கு நோக்ஜி அமர்ந்து ஜெபம் செய்தால் வறுமை உண்டாகும்..
மேற்கு நோக்கி  அமர்ந்து ஜெபம் செய்தால் பொருட்செலவு உண்டாகும்..
வடமேற்கு நோக்கி அமர்ந்து ஜெபம் செய்தால் தீயசக்திகளை விரட்டும் சக்தி கிடைக்கும்…
வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும் யோகம் கிட்டும்..
வடகிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபம் செய்தால் முக்தி கிடைக்கும்..

எந்த திசையை நோக்கி ஜெபம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்த்தோம்.. இனி ஜெபம் செய்யும் இடத்தை பொறுத்து கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்..

வீட்டில் அமர்ந்து ஜெபம் செய்தால் வழக்கமாக கிட்டும் பலனில்  பத்து மடங்கு பலன் கிட்டும்..
கோவில் அல்லது வனத்தில் அமர்ந்து ஜெபம் செய்தால் நூறு மடங்கு பலன் கிட்டும்..
குளத்தின் கரையில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிட்டும்…
ஆற்றங்கரையில் அமர்ந்து ஜெபம் செய்தால்  லட்சம் மடங்கு பலன் கிட்டும்..
மலை உச்சியில் அமர்ந்து ஜெபம் செய்தால் ஒரு கோடி மடங்கு பலன் கிட்டும்…
சிவன் கோயிலில்  அமர்ந்து ஜெபம் செய்தால் இரண்டு கோடி மடங்கு பலன் கிட்டும்…
அம்பிகை சன்னிதியில் அமர்ந்து ஜெபம் செய்தால் பத்து மடங்கு பலன் கிட்டும்..

மேற்சொன்னவற்றை நினைவில் கொண்டு ஜெபம் செய்து நற்பலன்கள் பெறுவோம்!!

Published by
Staff

Recent Posts