தினமும் இட்லி, தோசை போரடிக்குதா?! அப்பசத்தான பருப்பு அடை செய்து கொடுங்க

அடை தோசை மிகவும் அருமையான, ஆரோக்கியமான உணவு. பெரும்பாலான பருப்பு வகைகள் கலந்து இதை செய்வதால் நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும். மேலும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு அடை தோசை ஆகச் சிறந்தது. இத்தகைய சுவைமிகுந்த அடை தோசையை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இட்லி அரிசி —- 1கப்

பச்சரிசி —– 1/4கப்

துவரம்பருப்பு —- 1/2 கப்

கடலை பருப்பு —- 1/4 கப்

பாசிப்பருப்பு ——- 2 டேபிள் ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு —– 1 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் —– காரத்திற்கேற்ப

பூண்டு ———- 2 பல்

உப்பு தேவையான அளவு.

மாவில் கலப்பதற்கு தேவையான பொருட்கள்:-

வெங்காயம் —— 2

தேங்காய் துருவல் ———- 1/4 கப்

பெருங்காயம் தூள் —– 1/4 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை:-

இட்லி அரிசி, பச்சை அரிசி, பருப்பு வகைகள், பூண்டு மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கொரொகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்,. அதனுடன் தேவையான அளவுக்கு உப்பு, வெங்காயத்தினை பொடியாக நறுக்கி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தோசைக்கல்லை காய வைத்து கலந்து வைத்திருக்கும் மாவினை ஊற்றி தோசைகளாக வார்த்தெடுக்கவும், தோசைப்போல் மெல்லிசாக இல்லாமல் கொஞ்சம் கனமாக ஊற்றவும், எண்ணெய் ஊற்றி இருபக்கமும் திருப்பிப்போட்டு வெந்ததும் பருப்பு அடை ரெடி..

தேங்காய் சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். வெங்காயத்தை அப்படியே சேர்க்காமல் கடுகு உ.பருப்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி மாவில் சேர்த்தும் தோசை வார்க்கலாம். முருங்கைக்கீரை அல்லது சிறுகீரை, முளைக்கீரை இப்படி எதாவது கீரை ஒன்றையும் சேர்த்து அடை வார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews