தலைவர் படத்துக்கே நோ சொன்ன சுந்தர்.சி… அதுக்காக அடி மடியிலேயே கைய வச்சா என்னங்க நியாயம்…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். ரஜினி நடித்தாலே அப்படம் வெற்றிதான் என கூறும் அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். என்னதான் வயதானாலும் இவர் தனது ஸ்டைலை இன்னமும் கடைபிடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான திரைப்படம்தான் ஜெயிலர். இப்படம் இவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் முன்னிலை வகித்தது. இப்பட வெற்றிக்கு பின் இவர் தற்போது தனது 170வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த குட்டி ஸ்டோரி சொல்ல தயாரான ரஜினி! லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா!

இவர் சமீபத்தில் தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் இவர் கேமியோ ரோலில்தான் நடித்துள்ளார். ஒரு காட்சியில் ரஜினி நடித்தால் கூட அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவில்லையாம். இதற்கு பலவித காரணங்களும் இணையத்தில் உலாவுகின்றன. ஆனால் படக்குழுவோ இப்படத்தின் ஒரு சில காட்சிகளை காணவில்லை. அதனால் படம் ரிலீஸ் ஆக தாமதமாகும் என தெரிவித்துள்ளனர்.

வாரிசுக்கு முதல் படம் : உடன் நடித்த தந்தைக்கு இறுதிப்படமாக அமைந்த சோகம்

ஆனால் இதன்பின் ஒரு ரகசியமும் ஒளிந்துள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கு அயலான், சுந்தர்.சியின் அரண்மனை 4, லால் சலாம் போன்ற திரைப்படங்கள் வெளியாவதாக இருந்தன. ஆனால் இம்மூன்று திரைப்படங்களையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் வெளியிடபோகின்றனராம். மூன்று திரைப்படங்களையும் ஒரே நாளில் வெளியிட்டால் ஏதும் பிரச்சினை ஏற்படுமோ எனும் எண்ணத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சுந்தர்.சியிடம் அவரது அரண்மனை 4 பட ரிலீஸை ஒத்தி வைக்குமாறு பேசியுள்ளனர்.

ஆனால் சுந்தர்.சியோ கண்டிப்பாக பொங்கலுக்கு இப்படம் வரவேண்டும், இல்லையென்றால் தானே ரிலீஸ் செய்துவிடுவதாக கூறிவிட்டாராம். ரஜினி நடித்த படம் வெளிவரவில்லையானால் அது அவருக்கு ஒரு கெட்ட பெயரை வாங்கி கொடுத்துவிடுமோ எனும் எண்ணத்தில் படக்குழு இவ்வாறு ஹார்டு டிஸ்க்கை காணவில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதனால் இந்த பிரச்சினையை சரிகட்டவே லால் சலாம் திரைப்படத்தினை படக்குழு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவில்லையாம்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி – கமலா?.. அட இது புது கதையா இருக்கே.. வேறலெவல் புரமோஷன்!..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews