கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி – கமலா?.. அட இது புது கதையா இருக்கே.. வேறலெவல் புரமோஷன்!..

ஜிகர்தண்டா முதல் பாகத்தில் பாபி சிம்ஹா மற்றும் சிந்தார்த் நடித்ததை போல், இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸும் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்துடன் மட்டுமின்றி ஸ்டோன்பெஞ்ச் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் ஹீரோயினாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

மேலும் , ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தமிழகத்தின் வெளியீட்டு உரிமத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாக படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசரில், 1975ம் காலக்கட்டத்தில் நடந்த சம்பவம் போன்ற காட்சிகளை எடுத்துள்ளனர் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கேங்க்ஸ்டராகவும், எஸ்.ஜே. சூர்யா இயக்குநராகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ரிலீசாக உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

மேலும் ஜிகர்தண்டா2 படத்தை பற்றி பேசும் பொழுது கார்த்திக் சுப்பராஜ், இப்படத்தை மலைக்கிராமத்தில் படமாக்கியதாகவும், அந்த கிராமத்தில் இருந்த 65 பேரை தேர்ந்தெடுத்து 2 மாதங்கள் பயிற்சி கொடுத்து படத்தில் நடிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார்.

கமல் – ரஜினி

2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் “ஜிகர்தண்டா” படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, அம்பிகா, சங்கிலி முருகன், கருணாகரன் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

இயக்குநராக ஆகவேண்டும் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சித்தார்த்தும் எளிமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தில் அசால்ட் சேது என்னும் கதாபாத்திரத்தில் கேங்ஸ்டராக சிறப்பாக நடித்து பாபி சிம்ஹா தேசிய விருது பெற்றார். அந்த கதாபாத்திரத்தை முதலில் தன்னிடம் கூறி இருந்தால் தானே நடித்திருப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜிடம் சொல்லி பாராட்டி இருந்தார்.

இந்நிலையில், ஜிகர்தண்டா 2 படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்க ஆசைப்பட்டதாக தனது உதவி இயக்குனர்களிடம் பேசிய நிலையில், அதனை உண்மையாக்கி காட்டி விட்டார் அசோஷியேட் இயக்குநர் பாலு என்பவர் என உருவாக்கிய ரஜினி – கமல் ஜிகர்தண்டா பட நடிகர்கள் போல இருக்கும் ஏஐ போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான புரமோஷனை அதிகரிக்க முயற்சித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...