அடுத்த குட்டி ஸ்டோரி சொல்ல தயாரான ரஜினி! லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க உள்ளார். ரஜினி தனது 170 வது திரைப்படத்தை ஞானவேலு இயக்கத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடத்தப்பட உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் கதை உருவாக்க பணியில் தற்பொழுது லோகேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து ரஜினி தனது 172 வது திரைப்படத்தை மீண்டும் நெல்சன் உடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஜெய்லர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதியாக உள்ளது. அதற்கான வேலையில் தற்பொழுது நெல்சன் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெய்லர் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடித்த திரைப்படம் லால் சலாம். 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்கிய திரைப்படம் வை ராஜா வை. இதை அடுத்து ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு லால் சலாம் திரைப்படத்தை இயக்குகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் விஷ்ணு மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மேலும் தம்பி ராமையா, ஜீவிதா ராஜசேகர், தங்கதுரை மற்றும் உலகக் கோப்பை வென்ற கேப்டன் “கபில் தேவ்” ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக மொத்தம் 23 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இதற்காக அவர் லைக்கா நிறுவனத்திடம் இருந்து 40 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ரஜினி நடித்த போஷன் அனைத்தும் காணாமல் சென்று விட்டதாக சில வதந்திகள் பரவி வந்தது. படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவு பெற்ற நிலையில் இந்த தகவல் போலியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ரஜினி 171வது படத்தில் ரத்னகுமார்? லோகேஷ் முடிவால் ஆடிப் போன ரசிகர்கள்!

மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. அதற்காக இப்போது இருந்தே இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு துவங்கியுள்ளது. அந்த வகையில் லால் சலாம் திரைப்படத்திற்கு மிகப் பிரம்மாண்ட ஆடியோ லான்ச் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முன்னணி ஹீரோக்களான ரஜினி,விஜய் திரைப்படங்களைப் போல லால் சலாம் திரைப்படத்திற்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆடியோ லான்ச் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த ஆடியோ லாஞ்சில் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ளும் பட்சத்தில் ரஜினி கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் வெற்றி விழாவின் போது நடிகர் தளபதி விஜய் கூறிய குட்டி ஸ்டோரியை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறும் குட்டி ஸ்டோரிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews