பொழுதுபோக்கு

நம்பியார் பார்த்த வேலை!.. தலை தெறிக்க ஓடிய விக்ரமன்.. மனுஷன் இப்படியா பண்ணுவாரு..?

திரைப்படங்களில் வில்லன்கள் என்றாலே கணீர் குரல் வளம் கொண்டு வசனங்களை உச்சரிப்பதும் பார்த்தாலே நடுங்கக்கூடிய தோற்றம் கொண்டு அடையாளப்படுத்துவார்கள். இவை அனைத்திற்கும் கச்சிதமாக பொருந்தக் கூடியவர்

என்று சொன்னால் அது எம்.என்.நம்பியாரை தவிர வேறு யாரும் அந்த இடத்தை நிரப்ப முடியாது. தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கான இலக்கணத்தை வகுத்துக் கொடுத்தவர் நம்பியார். நாடக நடிகராக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன்களில் ஒருவராக வலம் வந்தார்.

மக்கள் திலகம் எம்ஜிஆரின் அஸ்தான வில்லனும் இவரே. வில்லன் மட்டுமின்றி குணச்சித்த கதாபாத்திரம் காமெடி கதாபாத்திரம் என அனைத்திலும் வெளுத்து வாங்கக் கூடியவர். என்னதான் திரையில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை பயம் காட்டினாலும் நிஜ வாழ்க்கையில் அவரைப் போல ஒரு ஜாலி ஆன கேரக்டரை பார்க்கவே முடியாது.

படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் சிரித்து பேசி கலகலப்பாக இருக்கக் கூடியவர். 1996 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சங்கீதா நடித்து இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “பூவே உனக்காக” மேலும் இப்படத்தில் சார்லி நம்பியார்,நாகேஷ்,மலேசியா வாசுதேவன் என பலரும் நடித்திருப்பார்.

இப்படத்தில் நம்பியாருக்கும் இயக்குனர் விக்ரமனுக்கும் இடையில் நடந்த சுவாரசிய சம்பவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் விக்ரமன். அதில் அவர் கூறியதாவது,” நம்பியார் எப்பொழுதும் படப்பிடிப்பு தளத்தில் கலகலப்பாக சிரித்து பேசி ஜாலியாக இருப்பார். அவரும் நாகேஷ் ஒன்று சேர்ந்து விட்டால் அங்கு சிரிப்பு பூகம்பமே ஏற்படும்.

படப்பிடிப்பு தளத்தில் படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனமே உணவுகளை வழங்கும். ஆனால் நம்பியார் மட்டும் அவர் மனைவி வந்து அவர்களுக்கு என்று தனி ஒரு அறை ஏற்பாடு செய்து அதில் அவர் சமைத்து நம்பியாருக்கு வழங்குவார். இதை நான் நீண்ட நாட்களாக கவனித்து வந்தேன்.

ஒருமுறை நம்பியாரிடம் சென்று நீங்கள் ஏன் படப்பிடிப்பு தளத்தில் வழங்கும் உணவை சாப்பிடாமல் உங்களுக்காக உங்கள் மனைவி இங்கு வந்து சமைத்து அதை நீங்கள் சாப்பிடுகிறீர்கள்..? உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் சாப்பாடா.‌? என்று கேட்டேன்.

என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை மறுநாள் மதியம் உணவு இடைவெளியின் போது என்னிடம் இன்று என்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார். நானும் உணர்ச்சிவசப்பட்டு அந்த ஸ்பெஷல் சாப்பாடுக்காக அங்கு சென்றேன். ஆசை ஆசையாக முதல் வாய் வைத்தேன்.

அதன் பிறகு என்னால் ஒரு பருக்கை கூட சாப்பிட முடியவில்லை காரணம் உப்பு காரம் துவர்ப்பு என்று எந்தவித அறுசுவையும் இன்றி இருந்தது. இதையெல்லாம் யார் சாப்பிடுவார்கள் என்று தலை தெரிக்க ஓட முயற்சித்தேன்.

அவர் என்னை வலுக்கட்டாயமாக பிடித்து அமர வைத்து அந்த சாப்பாட்டை சாப்பிட வைத்தார். சார் விடுங்க சார் எனக்கு இந்த சாப்பாடு வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் என்னை சாப்பிட வைத்தார்.

அதன் பிறகு அவர் மனைவி கூறிய போது தான் தெரிந்தது நம்பியாருக்கு எப்போதும் இந்த மாதிரியான சாப்பாட்டை மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதன் பின்னர் அவர் சாப்பிடும் ஸ்பெஷல் சாப்பாடு பக்கம் நாம் போகவே மாட்டேன்” என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Published by
Sathish

Recent Posts