மனோரமாவை அழ வைத்த ரஜினிகாந்த்!.. இதற்குப் பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா..?

 

தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் நடிகர்கள் வெகு சிலரே உள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவரில் ஒருவர் ஆச்சிமனோரமா.
நகைச்சுவை,குணச்சித்திர வேடம்,வில்லி என அனைத்திலும் பட்டையைக் கிளப்ப கூடியவர். திரையுலகில் சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமைக்குரியவர். திரை உலகில் அவர் யாரையும் காயப்படுத்தி தரை குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதற்கான எந்த பதிவும் இல்லை. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை முறையில் மேடை ஒன்றில் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இதனால் ரஜினிகாந்திற்க்கும் மனோரமாவிற்கும் இடையே மன வருத்தம் இருந்ததுண்டு. இதனால் ரஜினிகாந்த் படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் பலரும் மனோரமாவை தங்களின் படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு தயங்கினார்கள். ஏனென்றால் ஒரு வேலை மனோரமாவை புக் செய்தால் ரஜினிகாந்த் தங்களுக்கு தேதி கொடுக்க மாட்டார் என்ற பயத்தில் இருந்தனர். இதனால் தமிழ் சினிமாவில் மனோரமாவின் வாய்ப்பு குறைய தொடங்கியது. இந்த சம்பவம் எப்படியோ ரஜினியின் காதுகளுக்கு சென்றது.

உடனே தன்னுடைய புதிய படத்தில் தன்னுடன் நடிக்குமாறு மனோரமாவிடம் ரஜினிகாந்த் வேண்டுகோள் வைக்கிறார். இந்த அழைப்பை மனோரமா தன் கனவில் கூட இணைந்து பார்க்கவில்லை. காரணம் பொது மேடையில் இப்படி தாக்கி பேசியுள்ளோமே அதை எதையும் பொருட்படுத்தாமல் தனுடன் நடிக்க ரஜினி அழைக்கிறாரே.. என்று நினைத்துக் கொண்டு இருந்தார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசாமல் ஒதுங்கி இருந்துள்ளார். இதை கவனித்த ரஜினிகாந்த் தானாக முன்வந்து மனோரமாவிடம் பேசியுள்ளார்.

அவரும் எதுவும் நடக்காது போல் சகஜமாக பேசி இருந்துள்ளார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து மனோரமாவிற்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த் பங்கேற்றார். அதில் பேசிய ரஜினிகாந்த் பில்லா படத்தின் போது எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தேன். அந்த நேரத்தில் வெளிப்புற படப்பிடிப்பு தளங்களில் சில ரசிகர்கள் என்னை பைத்தியம் பைத்தியம் என்று சொல்லி என்னை மேலும் மனதளவில் காயப்பட செய்தனர்.

அவர்களை எல்லாம் வார்த்தைகளால் வறுத்து எடுத்து விட்டவர் மனோரமா. அந்த நேரத்தில் எனக்கு பாதுகாப்பாக இருந்தார். அப்போது என்னை அணைத்த கைகள் எத்தனை முறை அடித்தாலும் தாங்கிக் கொள்வேன் என்று ரஜினிகாந்தின் பேச்சைக் கேட்டு அழுத்தே விட்டார் மனோரமா. இப்படி அவர்களுக்குள் இருந்த பிரச்சனையை ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் சமூகமாக முடித்துக் கொண்டனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.