ஜெயில் மெனுவை பார்த்து வாயை பிளக்கும் பொதுமக்கள்! அப்படி என்ன ஸ்பெசல்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு புதிய உணவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறைவாசிகளின் உணவு முறையை மாற்றும் திட்டம் 26 கோடியில் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறைத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி புழல் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு புதிய உணவு முறையை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்து வைத்தார்.

இதன்படி காலை வேளையில் கஞ்சி, நிலக்கடலை வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி கோதுமை உப்புமா, ராகி, உப்புமா உள்ளிட்டவை வழங்கப்படும். சிறையில் உள்ள பி – பிரிவு சிறைவாசிகளுக்கு காலை உணவில் புதன் சனிக்கிழமைகளில் முட்டை வழங்கப்படும்.

மாலை நேரம் டீ தினமும் பச்சைப்பயிறு, வெள்ளை கொண்டை கடலை, கருப்பு கொண்டை கடலை என ஒவ்வொரு வகை சுண்டல் வழங்கப்படும். ஏற்கனவே ஞாயிறு மட்டும் வணங்கப்பட்டு வந்த சிக்கன் குழம்பு இனி புதன்கிழமைகளிலும் வழங்கப்படும்.

உணவே மருந்து.. பாதுகாப்பான உணவுக்காக உலக உணவு பாதுகாப்பு தினம்… ஜூன் 7!

புதிய உணவு முறைப்படி ஏ பிரிவு சிறைவாசி ஒருவருக்கு ஏற்கனவே 146.44 காசுகள் செலவிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 207. 89 காசுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பி பிரிவு சிறைவாசி ஒருவருக்கு ஏற்கனவே 96 ரூபாய் 38 காசுகள் செலவிடப்பட்டு வந்த நிலையில் தற்போது 135 ரூபாய் 26 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews