புகழ்பெற்ற அஜ்மீர் தர்ஹாவுக்கு போர்வை வழங்கிய பிரதமர்

ஹிந்து மதத்தில் எப்படி சித்தர்கள் ஜீவசமாதி அடைந்து அவர்களை வழிபடுகிறோமோ அது போல இஸ்லாமிய மதத்திலும் இது போல மகான்களின் சமாதியை வழிபடுகிறார்கள். அந்த இடங்களை தர்ஹா என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏர்வாடி தர்ஹா, நாகூர் தர்ஹா என நிறைய தர்ஹாக்கள் உள்ளன. இந்த மகான்களின் சமாதிக்கு தங்கள் கஷ்டங்கள் தீர வந்து வழிபடுபவர்கள் உண்டு.

அஜ்மீர் தர்கா என்பது சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் மக்பரா ஆகும். இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் ஊரில் அமைந்துள்ளதால் இது அஜ்மீர் தர்கா என அழைக்கப்படுகிறது. அஜ்மீர் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.

இந்த புண்ணியத்தலத்தில் உள்ள மகானுக்கு போர்வை சாற்றி வழிபடுவது தர்ஹா வழிபாட்டில் முக்கியமான அம்சம் ஆகும். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இந்த தர்ஹாவுக்கு அடிக்கடி சென்று வருவார்.

தற்போது பிரதமர் மோடி இந்த புகழ்பெற்ற தர்ஹாவுக்கு காவி நிறத்திலான போர்வை ஒன்றை வழங்கினார்.

Published by
Staff

Recent Posts