தமிழகம்

இதை வேரோடு அழிப்பதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை சந்தை களமாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று முன்தினம் குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் போதைப்பொருள் விற்பனையை தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

மதிய உணவில் கோழிக்கறி! தமிழக முதல்வர் ஆலோசனை!!

இந்நிலையில் 50 ஆயிரத்து 700 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே போல் 11 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு கஞ்சா உள்ளிட்ட போதைபொருள் தொடர்பாக 12 ஆயிரத்து 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.

கஞ்சா வழக்கில் மட்டும் 14 ஆயிரத்து 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கி கணக்கு முடக்கம், சொத்துக்கள் முடக்கம், உறுதி மொழி பத்திரம் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை திமுக அரசு ஆட்சியில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகை: மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிப்பு!!

தொடர்ந்து பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இதுபோன்று நடைபெறவில்லை என்றும் கஞ்சா, குட்கா விற்பனையை வேரோடு அழிப்பதுதான் அரசின் நோக்கம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Published by
Revathi

Recent Posts