இயக்குனர் அட்லியை லாக் செய்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்! சம்பவத்திற்கு தயாரான ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் பட்டியலில் இயக்குனர் அட்லி முக்கிய இடத்தை பிடித்துள்ளார். ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அதை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மெர்சல், தெறி, பிகில் என மூன்று மெகா ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்திருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் வைத்து ஹிந்தியில் ஜவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். உலக அளவில் பிரமாண்டமாக வெளியான ஜவான் திரைப்படம் 1100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லி அடுத்து எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க உள்ளார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது. அடுத்ததாக தளபதி விஜயுடன் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாக இருந்தனர். அதாவது ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதே நேரத்தில் நடிகர் கமலஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் பல அஜித்துடன் இணைந்து ஒரு படத்தில் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இயக்குனர் அட்லி தற்பொழுது மும்பையில் கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் ஜவான் படத்தை இயக்கும் நேரத்தில் இயக்குனர் அட்லி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை சந்தித்ததாகவும், அவருடன் இணைந்து ஒரு படம் இயக்க தயாராக இருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளிவர துவங்கியுள்ளது. இயக்குனர் அட்லி அடுத்ததாக தளபதி விஜய் அல்லது கமலை வைத்து படம் இயக்க ஆர்வமாக இருந்தாலும் இந்த இரு நடிகர்களும் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அவர்களின் கால்ஷீட் கிடைக்க தாமதமாகும் காரணத்தினால் இயக்குனர் அட்லி மெர்சல் போன்ற ஒரு வெற்றி படத்தை அல்லு அர்ஜுனன் வைத்து இயக்க தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மக்களின் அன்பும், பாசமும் போதும்… இந்த விருது எல்லாம் எனக்கு வேண்டாம்.. கிடைத்த விருதை திருப்பி அனுப்பிய எம்ஜிஆர்!

மேலும் இயக்குனர் அட்லி எந்த ஹீரோவை வைத்து படம் இயக்கினாலும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க இருந்ததாகவும், அதன் பின் சில காரணங்களால் ஜவான் படம் கைவிடப்பட்டு ஷாருக்கானின் ரெட் சில்லி தயாரிப்பு நிறுவனம் அந்த திரைப்படத்தை தயாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இயக்குனர் அட்லி அடுத்ததாக எந்த மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுத்தாலும் அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அட்லி அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு தெலுங்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருப்பதாகவும் இந்த படத்தின் மீதான ஆர்வம் தற்பொழுதே அதிகரிக்க துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அட்லி தளபதி விஜய் அல்லது நடிகர் கமலஹாசனை வைத்து பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றை இயக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அந்தப் படத்தில் நடிகர் சாருக்கானின் பங்களிப்பும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.