எம்ஜிஆருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்த இயக்குனர்! திறமையாக சமாளித்த மக்கள் திலகம்!

மக்கள் திலகம் எம்ஜிஆரை ஒரு இயக்குனர் கண்டிப்பாக இந்த திரைப்படத்தில் நீங்கள் மது அருந்தி தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். அதன் பிறகு எம்ஜிஆர் அதை எப்படி சமாளித்தார் என்பது குறித்த இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன் வரை அவர்தான் தமிழ் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும், நம்பர் ஒன் ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து சாதாரண நடிகராக அறிமுகமாகி துணை பாத்திரங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் எம்ஜிஆர். இந்த வெற்றி வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டும் கிடைத்ததில்லை. அதற்குப்பின் எம்.ஜி.ஆரின் தீவிர உழைப்பும் விடாமுயற்சியும் முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

அந்த வகையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் நூறாவது திரைப்படம் ஜெமினியின் ஒளி விளக்கு. இந்த திரைப்படத்தை எஸ் எஸ் வாசன் தயாரித்திருந்தார். மேலும் எம்ஜிஆரின் முதல் படமான சதி லீலாவதி படத்தின் கதையை எழுதியவர் எஸ் எஸ் வாசன் அவர்கள் தான். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்ஜிஆரின் நூறாவது திரைப்படமாக அமைந்தது. ஹிந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ஒரு படத்தை தான் தமிழில் ஒளிவிளக்கு என ரீமேக் செய்திருந்தனர். எந்தவித குடிப்பழக்கம் சிகரெட் என கெட்ட பழக்கங்கள் இல்லாத எம்ஜிஆர் குடியின் தீமையை உணர்த்த வேண்டும் என்பதற்காக இந்த படத்தில் ஒரு குடிகாரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மது குடிப்பதன் தீமையை உணர்த்தும் வகையில் தைரியமாக சொல் நீ மனிதன் தானா.. நீதான் ஒரு மிருகம் என பாடல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த பாடல் வரும்பொழுது எம்ஜிஆரின் மனசாட்சி நான்கு பேராக வெளியில் தோன்றும். மொத்தம் திரையில் ஐந்து எம்ஜிஆர் பல வண்ண உடையில் தோன்றும் காட்சி திரையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த பாடல் காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக நடிகர் எம் ஜி ஆர் இரவு பகல் பாராமல் கடினமாக உழைத்திருப்பார். பாடல் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டிருந்தது. ஜெமினி ஸ்டுடியோவில் ரஷ் போட்டு பார்க்க வேண்டும். இந்த படத்தின் தயாரிப்பு வேலைகளை எல்லாம் எஸ் எஸ் வாசலில் மகன் எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் தான் கவனித்துக் கொண்டார்.

அமெரிக்க நகரின் ஒரு நாள் மேயராக மாறிய சிவாஜி! வியப்பில் திரையுலகம்!

இந்த ஒரு பாடல் காட்சிக்காக பல நாள் கடினமாக எம்ஜிஆர் நடித்து வந்ததால் களைப்பின் காரணமாக பாடலை போட்டு பார்ப்பதற்கு முன்னதாகவே நள்ளிரவு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். பாடல் காட்சிகள் படமானதை பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்பது குறித்து தனக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவிக்கும்படி படக்குழுவிற்கு கட்டளை விடுத்திருந்தார் எம்ஜிஆர். அதன் பின் பட குழு இந்த பாடல் காட்சிகளை பார்த்த பொழுது தைரியமாக சொல் எனும் பாடல் மிக சிறப்பாக அமைந்திருக்கும். இந்த தகவலை எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்க வேண்டும் என பட குழு முடிவெடுத்தது. அந்த நேரத்தில் எம்ஜிஆர் பின் வரிசையில் அமர்ந்திருப்பதை பாலசுப்பிரமணியன் பார்த்து விடுவார்.

நாள் முழுக்க படப்பிடிப்பில் வேலை செய்த களைப்பால் எம்ஜிஆர் வீடு திரும்பினாலும் மனதில் பாடல் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டிருக்குமோ என்ற கவலை ஒரு பக்கம் இருந்துள்ளது. அதனால் வீடு செல்லாமல் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார் எம்ஜிஆர். அப்பொழுது படக்குழு பாடலை உற்று நோக்குவதை கவனித்து அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என பின் வரிசையில் அமைதியாக அமர்ந்துள்ளார். தொழில் மீது நடிகர் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வமோ மிகப் பெரிய அர்ப்பணிப்பும் தான் அவரை மிகப்பெரிய நடிகராக மாற்றியது.

Published by
Velmurugan

Recent Posts