குக் வித் கோமாளி சீசன் 5 இல் கலந்துக் கொள்ள இருக்கும் பிரபலத்தின் வீட்ல விசேஷம்…

விஜய் டிவியின் மிக பிரபலமான ஹிட்டான ரியாலிட்டி நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்த நிலையில் தற்போது சீசன் 5 இன்று கோலாகலமாக தொடங்கியது. முந்தைய சீன்களில் செஃப் தாமு அவர்களும் செஃப் வெங்கடேஷ் பட் அவர்களும் நடுவர்களாக இருந்தனர்.

ஆனால் இந்த சீசனில் நடுவராக தான் பங்கேற்க்க போவதில்லை என செஃப் வெங்கடேஷ் பட் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கான சரியான கரணங்கள் எதுவும் தெரியவில்லை.

அதைத் தொடர்ந்து இந்த சீசனில் செஃப் தாமு அவர்களுடன் இணைந்து புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் பங்கேற்க இருப்பதாக சேனல் அறிவித்தது. இது பேச்சுப் பொருளாக மாறினாலும் நிகழ்ச்சியை பற்றிய எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக இருந்தது.

அதே போல் கடந்த வாரமே போட்டியாளர்கள் பட்டியலை சேனல் வெளியிட்டிருந்தனர். VTV கணேஷ், இர்பான், சுஜிதா, அக்ஷய் கமல், வசந்த் வசி, பிரியங்கா தேஷ்பாண்டே போன்றோர் கலந்து கொள்ளகின்றனர். உணவுகளை ருசிபார்த்து ரெவியூ கூறும் யூ- டியூபர் ஆன இர்பான் இந்த சீசனில் கலந்துக் கொள்வது புதுமையான ஒன்றுதான்.

யூ- டியூபில் 40 இலட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ள இர்பான் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள உணவுகளை ரெவியூ கூறுவதால் பிரபலமானவர். மற்றும் நடிகர் நடிகைகளுடன் புட் டேட் சென்று அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டே நேர்காணல் செய்வார், அதை ஸ்வாரஸ்யமாகவும் செய்பவர். கடந்த ஆண்டு இர்பான் ஆலியா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை இப்போது அறிவித்தார் இர்பான். குக் வித் கோமாளியில் கலந்து கொளவதற்காகவும் அவர் தந்தை ஆக இருப்பதற்காகவும் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...