தஞ்சாவூர் கோவில் தேரோட்டம் ரத்து

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைப் திருவிழா கொடியேற்றத்துடன் 8ம் காலை (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020 -ம் ஆண்டில் கரோனா லாக் டவுன் காரணமாக இக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு தஞ்சையில் சித்திரைப் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வாரமே தொடங்விட்டது. முன்னதாக பஞ்ச மூர்த்தி சுவாமிகள் புறப்பாடு பிரகாரத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்கக் கொடி ஏற்றப்பட்டது.

இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் ச.கிருஷ்ணன், கோயில் செயல் அலுவலர் எஸ்.மாதவன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரோனா தொற்றுப் பரவல் இரண்டாவது அலை நிலவுவதால்,  கோயில் விழாக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. என்றாலும், நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோயிலுக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கோயில் வளாகத்துக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும் எனக் கோயில் அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால் ஏப். 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Published by
Staff

Recent Posts