பிரண்ட்ஸ் படத்துல முதல்ல நடிக்க இருந்த ஹீரோயின்ஸ் இவங்களா? வைரலாகும் புகைப்படம்

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பிரண்ட்ஸ். விஜய்க்கு காதலுக்கு மரியாதை படத்திற்குப் பின் இப்படம் பெரிய வெற்றி பெற்றது. விஜய்,சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, வடிவேலு, ரமேஷ் கண்ணா, சார்லி, ராதாராவி உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் இப்படம் வெளியாகி வசூலை அள்ளியது. குறிப்பாக பாடல்களும், நேசமணி வடிவேலு காமெடியும் படத்தினை அடுத்த லெவலுக்குக் கொண்டு சேர்த்தன.

இன்றளவும் நேசமணி வடிவேலு மீம்ஸ்களிலும், ஸ்டிக்கர்களிலும் கலக்கி வருகிறார். மேலும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவான தென்றல் வரும் வழியை.. போன்ற பாடல்கள் இதயத்தை வருடின. இளையராஜாவின் இசை இப்படத்திற்கு பெரிதும் பலம் சேர்த்தது.

இயக்குநர் வஸந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் படத்தில் நடித்த விஜய்யும், சூர்யாவும் பிரண்ட்ஸ் படத்தின் மூலமாக மீண்டும் இணைந்தனர். முதல் படத்தில் எதிரும், புதிருமாக நடித்தவர்கள் சில ஆண்டுகள் இடைவெளியில் உருவான இந்தப் படத்தில் உற்ற நண்பர்களாக நடித்து நட்புக்கு இலக்கணம் சேர்த்தனர். இயக்குநர் சித்திக் பல வருடங்களுக்குப் பிறகு விஜய்யை வைத்து மீண்டும் காவலன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் காமெடி பெரிதும் ரசிகர்களைக் கவர்ந்தது.

அஜீத்தைப் பார்க்காமல் அழுத ஷாலினி.. இவங்க லவ் எப்படி உருவாச்சு தெரியுமா? இயக்குநர் சரண் சொன்ன ரகசியம்

நட்பினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் முதலில் ஹீரோயின்களாகத் தேர்வானவர்கள் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், சூர்யாவுக்கு சுவலட்சுமியும் கமிட் ஆகினர். ஆனால் சில காரணங்களால் இவர்கள் இருவருமே இப்படத்தின் நடிக்கவில்லை. இவர்களுக்குப் பதிலாகத்தான் தேவயானியும், விஜயலட்சுமியும் நடித்தனர். மேலும் தேவயானி கதாபாத்திரத்திற்கு ஜோதிகாவிற்குப் பிறகு சிம்ரன் பெயரும் அடிப்பட்டதாம். ஆனால் முடிவில் தேவயானியே தேர்வாகியிருக்கிறார். இப்படத்தின் போட்டோ ஷுட்டில் முதலில் தேர்வான இரு நாயகிகளும் இடம்பெற்ற புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.,

பூவே உனக்காக, செந்தூரப் பாண்டி, காதலுக்கு மரியாதை, குஷி என தளபதி விஜய்யின் வெற்றிப் பட வரிசையில் பிரண்ட்ஸ் படமும் இணைந்தது. ப்ரண்ட்ஸ் படத்திற்கு முன்னர் குஷி படத்தில் விஜய்யுடன் ஜோதிகா முதன்முதலில் இணைந்திருந்தார். அதன்பிறகு ப்ரண்ட்ஸ் பட வாய்ப்பு நழுவிப் போக பின்னர் திருமலை படத்தில் மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews