தளபதி விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்! படம் ரிலீஸ் ஆகுமா?

தளபதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதன் கிளைமாக்ஸ் காட்சி தற்போது ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படம் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. முன்னதாக, இருமொழிப் படம் தெலுங்கு வெளியீட்டில் டோலிவுட் தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து பல சிக்கல்களை எதிர்கொண்டது, பின்னர் மிக பெரிய பேசு பொருளாக அது மாறியது.

தற்போது, ​​வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியதால் வாரிசு மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது. படத்தின் ஷூட்டிங்கில் யானைகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் வந்ததாக வாரியம் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

இரட்டை குழந்தை பிறந்த யோகம் .. பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் இணையும் நயன்!

அந்த அறிக்கையில், “வாரிசு” திரைப்படத்தில் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் முன் படப்பிடிப்பு அனுமதியின்றி யானைகள்-5 ஐ பயன்படுத்தி உள்ளது. M/s வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சட்டவிரோதமாக விலங்குகளை பயன்படுத்தியதாக வாரியத்திற்கு புகார் வந்துள்ளது. “வாரிசு” திரைப்படத்திற்கான ப்ரீ ஷூட் விண்ணப்பத்தை வாரியம் எங்களிடமிருந்து இன்றுவரை பெறவில்லை.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது விலங்குகள் நல வாரியம் படக்குழுவிடம் விளக்கம் கேட்டுள்ளது.

Published by
Velmurugan

Recent Posts