இசைஞானி இளையராஜா உடன் சேர்ந்து பாடும் தளபதி விஜய்!

தென்னிந்திய திரை உலகின் தளபதி ஆக வலம் வரும் நடிகர் விஜய். கடந்த ஆண்டு தொடக்கத்தில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் பொழுதே இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கதை டிஸ்கஷனில் ஈடுபட்ட தளபதி விஜய் தனது 68 வது திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து நடிப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாக துவங்கியது. லியோ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின்பு தளபதி 68 படத்தின் பூஜைகள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று படப்பிடிப்புகள் துவங்கியது. சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையில் படத்தில் நடிக்க இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து சென்னையில் ஒரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு அடுத்தடுத்த செட்யூல் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. சென்னையை தொடர்ந்து அடுத்ததாக தாய்லாந்து, சவுத் ஆப்பிரிக்கா என வெளிநாடுகளில் பறந்த படக்குழு சமீபத்தில் ஹைதராபாத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தற்பொழுது சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதம் முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் இயக்குனர் வெங்கட் பிரபு ஸ்ரீலங்காவில் அடுத்த லொகேஷன் பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த ஷெடியூல் ஸ்ரீலங்காவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்த படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் தளபதி விஜய் அப்பா, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் டைம் ட்ராவல் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படம் எனவும் சினிமா வட்டாரங்களால் தகவல்கள் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஏஐ தொழில்நுட்பத்திற்காக படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறைவேறாமல் போன கமலஹாசன் மற்றும் ஸ்ரீவித்யா காதல்! வைரலாகும் வீடியோக்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் GOAT திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் மேலும் இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. புதிய கீதை திரைப்படத்திற்கு பின் தளபதி விஜய் மற்றும் இசையமைப்பாளர் யுவன் GOAT திரைப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ஓபனிங் சாங் குறித்த சில மாஸ் அப்டேட்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகி இருந்தது. அந்த வகையில் தளபதி 68 படத்தின் ஓபனிங் பாடலை பாடல் எழுத்தாளர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். மேலும் இந்த பாடல் குறித்த அப்டேட்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் இந்த ஓபனிங் சாங் குடும்ப ரசிகர்களை கவரும் விதத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படத்திற்கு இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாடல் குறித்த ஒரு மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா இந்த படத்தில் ஒரு பாடலை பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இசைஞானி இளையராஜா உடன் தளபதி விஜய் இந்த பாடலை சேர்ந்து பாட உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் அப்டேட் ஆக உள்ளது. படத்தில் இந்த பாடல் அப்பா மகன் என இருவரும் சேர்ந்து பாடுவது போன்ற காட்சிகள் அமையப்பெற்று இருப்பதால் தளபதி விஜய் மற்றும் இளையராஜா இணைந்து இந்த பாடலை பாட இருப்பதாகவும் அந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதி இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.