தளபதிக்கே தெரியாதாம்… ஜேசன் சஞ்சய்க்கு வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணம் இவர்தானாம்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு சமீபத்தில் இயக்குனராக கிடைத்த முதல் பட வாய்ப்பு குறித்து ஒரு ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய்யின் உதவியால்தான் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்துடன் இணையும் வாய்ப்பு கிடைத்ததாக பலர் நினைத்து வருகிறோம். ஆனால் அது உண்மை இல்லையாம்.

தளபதி விஜய்யின் சித்தி மகனான இயக்குனர் சஞ்சீவ் மூலமாக தான் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சஞ்சீவ் வேறுயாரும் இல்லை நடிகர் விக்ராந்த்தின் அண்ணன் தான். இவர் 2015ஆம் ஆண்டு விக்ராந்த் நடிப்பில் தாக்க தாக்க படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.

இந்த படம் வெற்றி படமாக அமையவில்லை என்றாலும் ஒரு படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் விஜய்யின் மகன் சஞ்சய் தான் உருவாக்கிய கதையை அவரிடம் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் சஞ்சீவ் லைகா நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் எடுப்பதற்காக நீண்ட நாள் பேச்சு வார்த்தையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தான் லைகா நிறுவனத்திடம் இயக்குனர் சஞ்சீவ், விஜய் மகனிடம் ஒரு கதை உள்ளது, உங்களுக்கு விருப்பம் என்றால் கேட்டு பார்க்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதற்கு பிறகு தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் தளபதிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்படுகிறது.

இரண்டு நாளோ.. மூன்று நாளோ.. ஓடினால் போதும்.. இறுதியில் கமல் – ரஜினிக்கு செம டஃப் கொடுத்த டி. ராஜேந்திரன்!

ஆனால் இந்த வாய்ப்பு தளபதி மகன் என்ற பெருமைக்கு தான் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தளபதி ரசிகர்கள் அவரின் மகன் படத்துக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்பதால் தயாரிப்பு நிறுவனம் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து விடலாம்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க சமூக வலைத்தளங்களில் நெப்போடிசம் என்ற குற்றச்சாட்டு தற்பொழுது லைகா நிறுவனத்தின் மீது எழுந்துள்ளது. அதாவது டாப் ஹீரோக்களின் வாரிசுகளுக்கு லைகா நிறுவனம் முழுமையான ஆதரவு தருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...