தளபதி 69 திரைப்படத்தின் பூஜை மற்றும் ரிலீஸ் தேதி குறித்த கலக்கல் அப்டேட்!

தளபதி விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து பிரபுதேவா, டாப் ஸ்டார் பிரசாந்த், அஜ்மல், மைக் மோகன், ஜெயராம், மீனாட்சி சௌத்திரி, லைலா, சிநேகா, யோகி பாபு, பிரேம்ஜி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். வெங்கட் பிரபு- விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படம் டைம் ட்ராவல் மையமாக வைத்து உருவாக இருப்பதாகவும், படத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, சவுதி ஆப்பிரிக்கா, ஹைதராபாத், துருக்கி, ஸ்ரீலங்கா என பல நாடுகளில் நடத்தப்பட்டு வருவதாகவும் அடுத்தடுத்த செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு அரசியலில் களமிறங்க இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. கடந்த சில நாட்களாக தளபதி விஜய் படங்களை தொடர்ந்து அரசியலிலும் அதே ஆர்வம் காட்டி வருகிறார். படிக்கும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை தனது ரசிகர் மன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில் அரசியலில் களமிறங்கும் தளபதி விஜய் படங்களில் தொடர போவதில்லை என்றும் இரண்டு ஆண்டுகள் படங்களுக்கு பிரேக் விடப் போவதாகவும் சில தகவல்கள் வெளியாகி வந்தது.

அதே நேரத்தில் தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் தளபதி விஜய் கதை கேட்டதாகவும் அந்த கதைக்கு ஓகே கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும் தளபதி விஜயின் 69 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தை முடித்துவிட்டு 69 ஆவது திரைப்படத்தில் நடிப்பாரா அல்லது அரசியலில் களம் இறங்க உள்ளாரா என்பது குறித்து தற்பொழுது உறுதியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் மக்களுக்காக அரசியல் பணிகள் மேற்கொண்டு வந்தாலும் படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார் என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தளபதி 69ஆவது திரைப்படத்தை ஒரு பிரம்மாண்ட தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், தளபதி விஜய்க்கு 250 கோடிக்கு மேல் சம்பளம் பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்த டி வி வி தயாரிப்பு நிறுவனம் தளபதி விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மற்றும் தெலுங்கு இயக்குனர் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி 69 ஆவது திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் பட்சத்தில் தெலுங்கு இயக்குனர் தளபதி விஜயை மீண்டும் இயக்க வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் பூஜை மே மாதம் நடக்க இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தளபதி 69 ஆவது திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.