ஜெய்லரின் வெற்றிக்கு பின் நெல்சன் படத்தில் ஹீரோவாக போட்டி போடும் தனுஷ் மற்றும் சிம்பு!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்பொழுது உலகெங்கிலும் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. ஜெயிலர் படம் வெளியான முதல் நாளே உலகளவில் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. ரஜினியின் ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் மோசமான விமர்சனத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் வெற்றி அவரை மீண்டும் சூப்பர் ஸ்டார் ஆக மாஸ் காட்ட வைத்துள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஹுக்கும் பாடல் வரிகளின் மூலமாக அவர் தான் என்றைக்கும் சூப்பர் ஸ்டார் என தனது பல நாள் கோவத்தை வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி.

மீண்டும் பாட்ஷா படத்தை பார்ப்பது போல ரஜினியின் அதே எனர்ஜியும், நெல்சனின் படங்களில் இருக்கும் இயல்பான காமெடியும் இணைந்து இந்த படத்தின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் முதல் நான்கு படங்களில் ரஜினியை வைத்து வெற்றிப்படம் கொடுத்த பெருமை தற்பொழுது நெல்சனை சேர்ந்துள்ளது.

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களும் நல்ல வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னணி இளம் இயக்குனராக வலம் வரும் நெல்சனின் அடுத்த படத்தின் ஹீரோ யாராக இருக்கும் என்ற கேள்வி தற்பொழுது வெளியாக துவங்கியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் அடுத்த படத்தில் தனுஷ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று ஓடிடியில் வெளியாகும் மாவீரன் திரைப்படம்! தட்டு தடுமாறி வந்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆனால் நெல்சனின் முதல் படமான கோலமாவு கோகிலாவிற்கு முன்னதாக அவர் சிம்பு வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கினார். அதில் ஹீரோயினாக ஹன்ஸிகா, ஜெய், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கிய வேட்டை மன்னன் படம் பாதியிலேயே நின்று போனது. அதற்கு அடுத்து தான் கோலமாவு கோகிலா வெளியானது.

இந்நிலையில் நெல்சன் தனது முதல் படமான சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை தொடங்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் அடுத்த படத்தில் ஹீரோவாக யார் நடிக்க உள்ளார் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews