தளபதி 68 திரைப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா! லோகேஷ் ரூட்டில் அப்படியே செல்லும் வெங்கட் பிரபு!

தளபதி விஜய் தற்பொழுது லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படம் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தளபதி 68 படத்தின் டைட்டில் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வைரலாக பரவி வந்ததது. பாஸ் என இந்த படத்தின் டைட்டில் இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் மக்களின் ஆதரவிற்கு நன்றியும் தெரிவித்த அவர் இந்த படத்தின் டைட்டில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதன் படி தளபதி 68 படத்தின் டைட்டில் வரும் 31ஆம் தேதி மாலை வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து புத்தாண்டு அன்று தளபதி 68 படத்தின் மோஷன் வீடியோ வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதாவது அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த திரைப்படம் சயின்ஸ் பிக்சன் சேனலில் அதிரடியான சண்டைக் காட்சிகளுடன் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் ஒரு பாடல் காட்சிகளுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தாய்லாந்தில் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. அதை தொடர்ந்து தற்பொழுது ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, பிரேம்ஜி ,யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் தளபதி விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்திரி நடிக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்தில் மாளவிகா ஷர்மா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் யோகி பாபு உடன் இணைந்து காமெடி நடிகர் கஞ்சா கருப்பு நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் தளபதி 68 படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தளபதி 68 படம் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீமேக் என அதிர்ச்சிகரமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில் ஹாலிவுட் படமான ஜெமினி மேன் திரைப்படத்தை தழுவி தான் தளபதி 68 திரைப்படம் உருவாகியுள்ளதாக சர்ச்சைக்குரிய தகவல் மீண்டும் வெளியாகியுள்ளது. வில் ஸ்மித் ஹீரோவாக நடித்து வெளியான ஜெமினி மேன் திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரைக் கொண்ட ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சில மாற்றங்கள் செய்து தளபதி 68வது திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் ஹாலிவுட் படத்திற்கு இணையாக தளபதி விஜய் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் நடித்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ திரைப்படமும் இது போன்ற ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலை மையமாக வைத்து வெளியானது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் இந்த திரைப்படம் லியோ திரைப்படத்தை விட விமர்சன ரீதியாகவும் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.