தலைவர் 171 படத்தில் இத்தனை மல்டி ஸ்டார் நடிகர்களா?.. லோகேஷ் கனகராஜ் வெறித்தனம்!..

லியோவில் விட்டதை தலைவர் 171 படத்தில் பிடித்தே தீர வேண்டும் என்கிற வெறியில் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை இறக்க முடிவு செய்துள்ளார்.

விஜய்யின் லியோ படத்தில் ஒட்டுமொத்த படமும் நடிகர் விஜய் ஒருவரை நம்பியே இருந்தது தான் ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர்களை கடுப்பாக்கியது. ஃபிளாஷ்பேக் போர்ஷனில் மடோனா செபாஸ்டியனுக்கு பதில் வேறு யாராவது நடிகர்கள் இருந்திருந்தாலோ நடிகர் விஜய்யே டபுள் ஆக்‌ஷனில் நடித்திருந்தாலோ படம் வேறலெவலில் ஸ்கோர் செய்திருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தலைவர் 171ல் நட்சத்திர பட்டாளம்

தொடர்ந்து தோல்வியே சந்திக்காத லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தில் பெற்ற பாராட்டுக்களை எல்லாம் விஜய்யின் லியோ படத்தின் மூலம் முற்றிலுமாக கெடுத்துக் கொண்டார்.

அதிலும், போலியான ஃபிளாஷ்பேக் என அவர் கொடுத்த முரட்டு முட்டுவை பார்த்து ரஜினி ரசிகர்களே தலைவர் 171 படம் என்ன ஆகப் போகிறதோ என விமர்சிக்க ஆரம்பித்தனர்.

சோஷியல் மீடியாவை விட்டு விலகுகிறேன் என சொன்னாலும், இன்னமும் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கவனித்து வரும் லோகேஷ் கனகராஜ் பல முன்னணி நடிகர்களை ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தில் களமிறக்கி 1000 கோடி வசூலை தமிழ் சினிமாவுக்கு கொடுக்க முழு முயற்சியுடன் உள்ளார் எனக் கூறுகின்றனர்.

மீண்டும் இணையும் தேவா – சூர்யா?

நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகர் சிவகார்த்திகேயனை ரஜினிகாந்த் தரப்பு நடிகராகவும், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியை முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க வைக்க தீவிர பேச்சுவார்த்தைகளை லோகேஷ் கனகராஜ் நடத்தி வருவதாக கூறுகின்றனர்.

ஜெயிலர் படத்திலேயே விநாயகம் நடித்த ரோலுக்கு முதல் சாய்ஸ் மம்மூட்டியாகத்தான் இருந்தார். அப்படி நடிக்கவே சம்மதம் தெரிவித்த மம்மூட்டி லோகேஷ் கனகராஜ் படம் என்றால் மறுப்பா சொல்வார் என்றே சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் தேவாவும் சூர்யாவும் ஒன்றாக இணைந்து நடித்தால் அந்த படம் நிச்சயம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

அதே போல இந்த முறை நார்த் பெல்ட்டை குறிவைத்து பிரபல ஹீரோயினையும் அஜய் தேவ்கன் அல்லது அக்‌ஷய் குமார் போன்ற நடிகர்களையும் லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தில் கொண்டு வந்தால் வேறலெவலில் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜெயிலர் படத்துக்கு பிறகு ரஜினி கேமியோவாக நடித்துள்ள லால் சலாம் விரைவில் ரிலீஸாக உள்ளது. தா.செ. ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்து வரும் நிலையில், தலைவர் 171 படத்திலும் மிகப்பெரிய ஸ்டார் காஸ்ட்டை லோகேஷ் இறக்கப் போவது உறுதி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews