வெறியேறிய வேட்டையனாக மாறிய சூப்பர்ஸ்டார்!.. தலைவர் 170 டீசர் எப்படி எப்படி இருக்கு?

சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கியவர் இயக்குநர் த.செ. ஞானவேல்.

மீண்டும் அவர் சூர்யாவை வைத்து தான் படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சூர்யா கைவசம் இப்பவே பல படங்கள் லிஸ்ட் போட்டு வாடிவாசலுக்கே வழியில்லாமல் உள்ள நிலையில், அதிரடியாக ஞானவேலை ரஜினிகாந்த் தனது 170வது படத்தை இயக்க லாக் செய்து விட்டார்.

தலைவர் 170 டைட்டில் வேட்டையன்:

இந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ரம்யாகிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் திரையுலகத்துக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியது.

அதிரடியாக 600 கோடி வசூலை அந்த படம் ஈட்டிய நிலையில், மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், கார், காசோலை என ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத்துக்கு கொடுத்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அடுத்து லைகா தயாரிப்பில் உருவாகி வரும் தலைவர் 170 படத்தை ஞானவேல் இயக்குகிறார் என்றதுமே குறைவான பட்ஜெட்டில் தரமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிரடியாக அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளத்தை காஸ்டிங் அப்டேட்டாக கொடுத்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது.

பிறந்தநாள் பரிசு:

இந்நிலையில், ரஜினிகாந்தின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தலைவர் 170 படத்தின் டைட்டில் மற்றும் அறிமுக டீசர் வெளியாகி உள்ளது.

பூட்ஸ் கால்களுடன் ரஜினிகாந்த் நடந்து வர, சூப்பர்ஸ்டார் டைட்டில் மற்றும் ஹேப்பி பர்த்டே வாழ்த்தை போட்டு கடைசியாக “குறி வச்சா இரை விழணும்” என ரஜினிகாந்த் பஞ்ச் பேசும் காட்சியுடன் ‘வேட்டையன்’ என இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரமுகி படத்தில் வேட்டையனாக ரஜினிகாந்த் நடித்த நிலையில், தலைவர் 170 படத்தில் மீண்டும் வேட்டையனாக வெறித்தனம் காட்டப் போவது உறுதியாகி உள்ளது. ஜெயிலர் படத்தில் வந்ததை போலவே எளிமையாகவும் பவர்ஃபுல்லாகவும் இந்த படத்திலும் ரஜினிகாந்த் மாஸ் காட்டப் போகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.