பூஜை போட்டாச்சு… தலைவர் 170 படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட லைகா நிறுவனம்..!

சூர்யாவின் ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு இன்று காலை திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது.  தற்போது, அதன் புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் தலையில் விக் வைத்து தலைவர் 170 லுக்கில் தாறுமாறாக பூஜையில் பங்கேற்றுள்ளார். அவர் அருகே இயக்குநர் த.செ. ஞானவேல், மலையாள நடிகை மஞ்சு வாரியர், வில்லன் நடிகர் ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலர் பூஜையில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Thalaivar 170

தலைவர் 170 பட பூஜை

கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைவர் 170 படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் நடைபெற உள்ளது. சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றே ரஜினிகாந்த் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அதன் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் காலை முதல் வைரலாகி வந்த நிலையில், தற்போது பட பூஜை போட்டோக்களையும் வெளியிட்டு மாஸ் காட்டி உள்ளனர்.

லியோ படத்தின் டிரெய்லர் கொண்டாட்ட ஹாஷ்டேக் டிரெண்டாகும் என எதிர்பார்த்த நிலையில்,  தலைவர் 170 படத்தின் படபூஜை ஸ்டில்களில் வெளியாகி ஹாஷ்டேக்கில் டிரெண்ட் ஆகி வருகின்றன. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த பட பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கும் போட்டோக்களும் அருகே நடிகை மஞ்சு வாரியர் நிற்கும் புகைப்படங்களும்  வெளியாகி உள்ளன.

F7l5KuJboAAscIn

ரஜினிகாந்த் செம ஸ்டைலாக

தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் நடிக்க உள்ள அமிதாபச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் இந்த பூஜையில் பங்கேற்கவில்லை. இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் எளிமையான முறையில் தலைவர் 170 படத்தின் பூஜையை லைகா நிறுவனம் திருவனந்தபுரத்தில் நடத்தி உள்ளது. படத்தின் பட்ஜெட்டும் குறைவான பட்ஜெட் தான் என்றும் நடிகர்களின் சம்பளம் தான் அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

F7l5KuIbEAAWtIE

மஞ்சு வாரியர் பங்கேற்பு

இந்த படத்தில் மஞ்சு வாரியருக்கு ரஜினிக்கு இணையான ரோல் என்பதால் தான் ஆரம்பத்திலேயே அவர் பட பூஜையில் இருந்து பங்கேற்று வருகிறார் என்றும் விரைவில் பகத் ஃபாசில் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.