ரஜினியோட இடத்துல அஜீத்.. 22 வருடங்களுக்குப் பிறகு அஜீத்தைச் சந்தித்த செஃப் வெங்கடேஷ் பட்

பாரம்பரிய சமையல் குடும்பத்தில் பிறந்து தனது தந்தையின் தொழிலையே தானும் மேற்கொண்டு உலகின் பிரபல செஃப்களிடம் சமையல் கலையைக் கற்றுக் கொண்டு இன்று இந்தியாவின் தலை சிறந்த சமையல் கலை வல்லுநராகத் திகழ்கிறார் செஃப் வெங்கடேஷ் பட். மும்பை தாஜ் ஹோட்டலில் தனது சமையல் கலைத் தொழிலை ஆரம்பித்த வெங்கடேஷ் பட் இன்று முக்கிய வி.வி.ஐ.பிகளின் நாவினை தனது சுவையான சமையல் மந்திரத்தால் அடிமையாக்கி வைத்திருக்கறார்.

வெங்கடேஷ் பட் சமையலில் ருசி கண்ட பிரபலங்கள் அடிக்கடி அவரைச் சந்தித்து தங்களுக்கு வேண்டிய பிடித்த உணவுகளை சமைத்துத் தருமாறு கேட்டு உண்பது வழக்கம். ஸ்டார் விஜய்யில் குக் வித் கோமாளி, சமையல் ராணி, போன்ற பல நிகழ்ச்சிகளில் நடுவராக இடம்பெற்று தற்போது சன்டிவியில் டாப் குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் வெங்கடேஷ் பட்.

வெங்கடேஷ் பட் தன்னுடைய சமையலை மிகவும் ரசித்துச் சாப்பிடும் பிரபலங்களைப் பற்றித் தெரிவித்துள்ளார். அதில் நடிகை ஸ்ரீதேவி எங்கிருந்தாலும் சென்னை வந்தவுடன் தனது சமையலை விரும்பி உண்பார் என்றும், மேலும் மிகப் பெரும் தொழிலதிபர்களான டிவிஎஸ் மோட்டார்ஸ் அதிபர், இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் உள்ளிட்ட பிரபலங்களும் இவரது கைவண்ணத்தில் உருவான சமையலுக்கு ரசிகர்கள்.

அறிவு வரம் பெற்ற வில்லன்.. அந்த அறிவால் அவனை வீழ்த்தத் துடிக்கும் ஹீரோ.. தனி ஒருவன் படத்துக்கு மூல காரணமான ஹிரண்ய வதம்

இதைத் தவிர சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் வெங்கடேஷ் பட் தயாரிக்கும் உணவுவகைள் பிடிக்குமாம். தல அஜீத் மற்றும் அவரின் மனைவி ஷாலின் ஆகியோருக்கு வெங்கடேஷ் பட் சமையல் மிகவும் பிடிக்குமாம். ரஜினியை எந்த அளவுக்கு வெங்கடேஷ் பட்-க்கு பிடிக்குமோ அதே அளவிற்கு அஜீத்தையும் பிடிக்குமாம்.

அவருடைய தன்னடக்கம், ரசிகர்களை வழிநடத்துவது, நடிப்பை வெறும் தொழிலாக பார்ப்பது, சிறந்த பெற்றோரோக விளங்குவது, பைக், கார், டிரோன் இயக்குவது போன்ற காரணங்களால் அஜீத்தை வெங்கடேஷ் பட்-க்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அண்மையில் சென்னை கிராண்ட் சோழா ஹோட்டலில் அஜீத்தைச் சந்தித்திருக்கிறார் வெங்கடேஷ் பட். கடந்த 22 வருடங்களுக்கு முன்னதாக அவரை எப்படிச் சந்தித்தாரோ இன்றும் அதே மரியாதை, மதிப்பு, போன்றவை கொஞ்சமும் குறைவில்லாமல் வெங்கடேஷ் பட்-ஐ சந்தித்துப் பேசியிருக்கிறார் அஜீத். அவரைப் பார்த்த உடனேயே அவர் சொல்வதற்கு முன்பாகவே அஜீத்தே சார் உங்களைப் பார்த்து 22 வருஷமாச்சு என்று சகஜமாகப் பேசியிருக்கிறார் அஜீத்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews