பாதயாத்திரை, காவடி, பால்குடம்….பக்தர்கள் கொண்டாடும் தைப்பூசம்…கிரகத்தின் பாதிப்புகளில் இருந்து விடுபட மறக்காமல் வழிபடுங்க….!

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான கந்தப்பெருமானுக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. என்றாலும் தை மாசம் வரக்கூடிய பூச நட்சத்திரத்தின் அன்று கொண்டாடக்கூடிய தைப்பூசம் பக்தர்களுக்கு பேரானந்தத்தைத் தரக்கூடியது.

முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்து வழிபடுவது என பக்தர்கள் தைப்பூசத்திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாகவே நடந்து சென்று முருகப்பெருமானை வழிபடுவர். அதே போலத் தான் திருச்செந்தூருக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாகவே வலம் வருவர். இந்தத் தைப்பூசத்தைப் பக்தர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே கொண்டாடத் துவங்கி விடுவர்.

thaipoosam2
thaipoosam2

கார்த்திகை மாதம் முதலே பக்தர்கள் தைப்பூசத்திற்காக மாலை போட்டு விரதமிருக்கத் தொடங்கி விடுவர். 10 முதல் 15 நாள்கள் வரையிலும் பாதயாத்திரையாகக் கோவிலுக்குச் செல்வார்கள்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்வர். பிப்ரவரி 5ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அன்று முழுமையான பௌர்ணமி வருகிறது. பூச நட்சத்திரம் மதியம் 1.14 மணி வரை தான் உள்ளது.

பூசமும், பௌர்ணமியும் காலையில் இருந்தே வருவதால் 5ம் தேதியே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

வழிபடும் முறை

சனிப்பெயர்ச்சியால் மிகவும் பாதிப்பு நீங்க முருகப்பெருமானை தைப்பூசத்தினத்தன்று வேண்டி வழிபடலாம். கிரகத்தின் அனுக்கிரகத்தை நல்வண்ணமாக எனக்குப் பெற்றுத் தாருங்கள் என கடவுளிடம் வேண்ட வேண்டும்.

கந்தன் என்றாலே பகைவனின் பராக்கிரமத்தை வற்றச் செய்பவன் என்று அர்த்தம். பகைகள் நீங்க முருகப்பெருமானை வழிபட வேண்டிய நன்னாள் தான் இந்தத் தைப்பூசம்.

முருகப்பெருமானின் கடைக்கண் பார்வை நமக்குக் கிடைக்கையில் வாழ்க்கையில் நமக்கு எவ்வினைகளும் அண்டாது என்று சொல்கிறார் அருணகிரி நாதர்.

வழிபடும் முறை

முருகர்படத்திற்கு ஒரு டம்ளர் பால் வைத்து பூஜை செய்தால் போதும். இந்த நாளில் சுவாமிக்கு விசேஷமாக அரளிப்பூ, 2 வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு, சர்க்கரைப்பொங்கல் அல்லது பருப்புப் பாயாசம் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்யலாம்.

thaipoosam1
thaipoosam1

தைப்பூசத்தினத்தன்று விரதம் இருப்பது அவரவர் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. அருகில் உள்ள முருகர் கோவிலுக்குச் சென்று அங்கு அபிஷேகத்திற்குத் தேவையான பால், பன்னீர், இளநீர் ஆகிய பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம்.

கோவில்களில் வழிபடக்கூடிய தைப்பூச பூஜையில் நாம் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபடலாம். அன்றைய நாளில் நாலு பேருக்காவது அன்னதானம் செய்யுங்கள். அன்று காலையில் வழிபடுவது விசேஷமானது.

Alagu kuthal
Alagu kuthal

அன்றைய தினம் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவதாக இருந்தால் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை வழிபடலாம். காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், காலை 10.30 மணி முதல் 11.45 மணி வரையும் நாம் தைப்பூசத்தினத்தன்று முருகப்பெருமானை பூஜித்து வழிபடலாம். குழந்தைகளுக்குக் கந்த சஷ்டிக் கவசத்தைப் பாராயணம் செய்யக் கற்றுக்கொடுக்கலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.