மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நம் கண்கள் போன்றவர்கள். அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்தால் எளிதாக கற்றுக்கொள்வார்கள். கடுமையான மனவளர்ச்சி குறைபாடுகள் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் சின்ன சின்ன மனவளர்ச்சி குறைபாடுகளால் அவர்கள் கல்வியை தொடர முடியாது.


இவர்களுக்கென்று பல பள்ளிகள் இருந்தாலும் எளிமையாக இவர்களுக்குள் உள்ள எரிகின்ற அறிவுத்தீயை தூண்டி விடுகின்ற ஆசிரியர்கள் மிக குறைவே. ஒரு சில திறமைசாலிகளே உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பு வந்த தாரே ஜமீன் பர் என்ற அமீர்கான் நடித்த ஹிந்தி படம் பலராலும் விரும்பி பாராட்ட பெற்றது. இதில் உள்ள விசயம் என்னவென்றால் டிஸ்லெக்சியா எனும் மனநலகுறை பாட்டால் பாதிக்கப்படும் சிறுவனை ஒரு ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்து எளிமையான முறையில் அந்த மாணவனுக்கு கற்பித்தல் செய்கிறார் என்பதுதான் திரைப்படமே. இது போல திரைப்படங்கள் சினிமா உலகில் குறைவுதான்.

ஒரு மாணவனுக்கு எப்படி பாடம் நடத்தினால் அவன் ஈஸியாக புரிந்து கொள்வான் என்பதை விளக்கிய திரைப்படம் இது.

அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் இப்படம் இயக்கப்பட்டிருக்கும். ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் இப்படத்தை பார்க்க வேண்டியது அவசியம்.

சிலர் மொழி பிரச்சினை காரணமாக இப்படத்தை பார்க்க ஆர்வம் காண்பித்திருக்க மாட்டர். அவர்களும் முயற்சி செய்து இப்படத்தை காண வேண்டியது அவசியம்.

Published by
Staff

Recent Posts