கோவில் ஸ்டைல் புளியோதரை ரெசிப்பி!!

afc966910f790137c8ce2b7f2e710d5f

புளியோதரையினை கோவில் ஸ்டைலில் சாப்பிட பலருக்கும் பிடிக்கும். கோவில் ஸ்டைலில் இப்போது புளியோதரை செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:

அரிசி – 2 கப்

புளி –  2 எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1/2 டேபிள்ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6

வேர்க்கடலை – 2 ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

உளுந்து – 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

தனியா – 1 டேபிள் ஸ்பூன்

மிளகு – 1/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 5

நல்லெண்ணெய் – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பில்லை – சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை :

1. அரிசியை சாதமாக உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

2. அடுத்து ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறிக் கொள்ளவும்.

3. அடுத்து புளியை தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

4. அடுத்து புளித் தண்ணீரில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

5. அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும். அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி புளித் தண்ணீரை ஊற்றவும்.

6. அடுத்து தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம், வெந்தயம் சேர்த்து வாணலியில் போட்டு வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

7. அடுத்து  எண்ணெய் பிரியும்போது பொடித்துவைத்த பொடியினைத் தூவி வேகவிட்டு இறக்கி கிளறினால் புளியோதரை ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews