மண மணக்கும் கோவில் புளியோதரை சாப்பிடணுமா? 10 நிமிடத்தில் புளியோதரை பொடி தயாரிப்பது எப்படி? ரெசிபி இதோ..

கோவில் புளியோதரை சொன்னாலே போதுங்க வாயில் எச்சிதான் ஊரும் அந்த அளவிற்கு புளியோதரை அவ்வளவு சிறப்பிக்க இருக்கும். அப்படி சுவையான புளியோதரை சாப்பிடணும்னா முதலில் அதற்கு பொடி தயாரித்து வைத்து கொள்ள வேண்டும். பொடி மட்டும் கையில இருந்தா போதுங்க மண மணக்கும் கோவில் புளியோதரையை நம்ம வீட்டுலே ரெடி பண்ணிடலாம்..

தேவையான பொருட்கள்

வறுக்க தேவையான பொருட்கள் :

கடலைப்பருப்பு – 1/2 கப்
வெள்ளை உளுந்தம்பருப்பு -1/2 கப்
கொத்தமல்லி விதை- 1/2 கப்
மிளகு – 2 மேஜைக்கரண்டி
கருப்பு எள்- 1 மேஜைக்கரண்டி
வெந்தயம்- 1 தேக்கரண்டி
மரச்செக்கு நல்லெண்ணய் 1 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை – கைப்பிடியளவு

புளி – 100 கிராம்
வெல்லம் -1/4 கப்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு -சுவைக்கு ஏற்ப

தாளிக்க தேவியான பொருட்கள்

வேர்கடலை- 1/2 கப்
கடுகு -1 மேஜைக்கரண்டி
மரச்செக்கு நல்லெண்ணய் – 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் – 5
கறிவேப்பிலை – 1/2 கப்

செய்முறை

1. முதலில் வறுக்க வேண்டிய பொருட்களை தனி தனியாக சிறிது நல்லெண்ணெய் விட்டு மணம் வீசும் வரை வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளவும்.

2. அடுத்து1 தேக்கரண்டி நல்லெண்ணய் விட்டு வரமிளகாயை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

3. புளியை அரை மணி நேரம் ஊற வைத்து கட்டியாக கரைத்து கொள்ளவும்.

4. இப்பொழுது கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் வேர்கடலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அதில் கறிவேப்பில்ல சேர்த்து வறுத்து கொள்ளவும்.

5. பின்பு அதே கடாயில் நல்லெண்ணய் ஊற்றி கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் இப்பொழுது மிக்ஸியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ்சா சுவையான சோள இடியாப்பம் செய்து கொடுக்கலாம் வாங்க..

6. அதன் பின்னர் அதில் புளி கரைதல் , பெருங்காயம், பொடித்த வெல்லம் மற்றும் தேவையான அளவிலான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்,

7. இப்பொழுது அரைத்து வைத்துள்ள இந்த பொடியுடன் தாளித்து எடுத்து வைத்துள்ள பொருட்களுடன் கலந்து எவர்சில்வர் டப்பாவில் போட்டு பிரிஜ்ல பத்திர படுத்தி வைத்து கொள்ளவும்.

8. இது 3 அல்லது 4 மாதங்கள் வைத்து உபயோகித்து கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.