டேஸ்ட்டியான முந்திரி அல்வா ரெசிப்பி!!

e611d90a2878fdeb52caafda28ed813a-1

முந்திரியினை பொதுவாக நாம் வறுத்துச் சாப்பிடுவோம். அத்தகைய முந்திரியில் தித்திப்பான அல்வா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
1. முந்திரிப் பருப்பு : 1/2 கிலோ
2. சர்க்கரை : 1/2 கிலோ
3. நெய் : 1 ஸ்பூன்
4. ஏலக்காய் தூள் : 1 ஸ்பூன்
5. பால்- கால் டம்ளர்

செய்முறை:
1.    முந்திரிப் பருப்பினை பாலிப் போட்டு 3 மணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் போட்டு மைய அரைக்கவும்.
2.     அடுத்து வாணலியில் நெய்விட்டு ஏலக்காய்த் தூளைப் போட்டு வதக்கி முந்திரிப் பருப்பு கலவையைப் போட்டு வதக்கவும்.
3.    அடுத்து பாலைச் சேர்த்து நெய் அவ்வப்போது ஊற்றி கைவிடாமல் கிளறவும்.
4.    நெய் பிரிந்து வரும்போது சர்க்கரை சேர்த்து இறக்கினால் முந்திரி அல்வா ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews