Categories: சமையல்

டேஸ்ட்டியான பாதாம் அல்வா ரெசிப்பி!!

பாதாம் அதிக அளவு புரதச் சத்துகளைக் கொண்டதாக உள்ளது, பாதாமை அப்படியே சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்று அல்வா ரெசிப்பியாக செய்து கொடுக்கலாம்.

சமைக்க தேவையானவை
பால்- 100 மில்லி
சர்க்கரை – 100 கிராம்
பாதாம் பருப்பு- 50 கிராம்
நெய் – 30 மில்லி
குங்குமப் பூ- 3

செய்முறை : 
1.    பாதாம் பருப்பை 24 மணி நேரம் ஊற வைத்து தோலுரித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து இதனை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பொங்கும்போது பாதாம் கலவையைச் சேர்த்து வேகவிடவும்.
4.    அடுத்து சர்க்கரையை போட்டு சுண்டவிட்டு நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.
5.    இறுதியில் குங்குமப்பூ சேர்த்து இறக்கினால் பாதாம் அல்வா ரெடி.
 

Published by
Staff