ஜோதிடம்

விருச்சிகம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ஆழ்மன எண்ணங்கள் நிறைவேறும்!

Viruchigam Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது

இந்த குரோதி வருடத்தின் தொடக்கத்தில் விருச்சிக ராசிக்கு ஆறில் குரு சூரியன் ஐந்தில் ராகு புதன் சுக்கிரன் எட்டில் சந்திரன் என கிரக நிலைகள் அமைந்துள்ளது. ஆனால் வருடம் தொடங்கி 15 நாளிலேயே குரு ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

இது நல்ல பலன்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். நான்கு மாத காலத்திற்கு பல நன்மைகள் நடக்கும். ராசி அதிபதி செவ்வாய் என்பதால் விருச்சிக ராசி காரர்கள் முன்கோபம் படுபவர்களாக இருப்பீர்கள். இந்த வருடம் கோபத்தை எல்லாம் தவிர்த்து விட்டு பொறுமையாக இருந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.

எட்டில் சந்திரன் இருப்பதால் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நான்கில் சனி இருப்பதால் வீடு, மனை, வாகனம் வாங்கும் போது கவனமாக இருங்கள் இவற்றில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை சனீஸ்வர பகவான் உருவாக்குவார்.

லாப ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதால் அவர் சற்று சோதித்துப் பார்ப்பார். அதேநேரம் வெற்றிக்காக அதிக முயற்சி செய்தால் அந்த முயற்சிக்கான பலனை கேது நிச்சயமாக கொடுப்பார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பத்தாமிடத்திற்கு அதிபதியான சூரியன் ஆறாம் இடத்தில் சென்று அமர்கிறார் இதன் மூலம் தந்தை வழியில் செய்ய வேண்டிய பித்ரு வழிபாடுகளை செய்தால் நடக்க இருக்கும் தீங்குகள் கூட விலகி விடும்.

நான்காம் இடத்திற்கு அதிபதியான சனீஸ்வரன் நான்காம் இடத்திலேயே அமர்ந்திருக்கிறார். இதனால் மாணவர்கள் சோம்பேறித்தனத்தை கைவிட்டு விட்டு சுறுசுறுப்பாக படிப்பில் ஈடுபட வேண்டும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

அதேபோன்று இந்த வருடம் ராசியில் அமர்ந்திருக்கும் குரு ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களை நிறைவேற்றுவார். ராசி அதிபதி செவ்வாய் என்பதால் முருகனை வழிபடுவதன் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம்.

Published by
Aadhi Devan

Recent Posts