ஜோதிடம்

சிம்மம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: பேச்சில் மட்டும் கவனமாக இருங்க!

Simmam Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் சிம்மம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது.

சிம்ம ராசியினருக்கு குரோதி வருடம் பிறக்கும் போதே ராசி அதிபதி உச்சம் அடைகிறார் 2ல் கேது, 7ல் சனி, செவ்வாய் 8ல் ராகு, புதன், சுக்கிரன் 9ல் சூரியன், குரு 11ல் சந்திரன் என்றாக கிரக நிலை அமைந்துள்ளது. இரண்டில் இருக்கும் கேது தடை தாமதங்களை ஏற்படுத்துவார்.

ராசி அதிபதி சூரியன் என்பதால் சிம்ம ராசி அன்பர்கள் ஆதிக்கம் உடையவர்களாக தான் பெரும்பாலும் இருப்பார்கள். அதேநேரம் சூரியன் ஒன்பதாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

2ல் இருக்கும் கேது கடினமான வார்த்தைகளை பேச வைப்பார். இதைக் காரணமாக வைத்து 7ல் இருக்கும் செவ்வாயும் சனியும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனையை ஏற்படுத்த பார்ப்பார்கள். பேச்சில் கவனத்துடன் இருந்துவிட்டால் எந்த சண்டை சச்சரவுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

திருமணம் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடந்தேறும். ஆனால் சனி, செவ்வாய் சேர்ந்து இருப்பதால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. 5ல் இருக்கும் குரு 10க்கு செல்ல இருக்கிறார். இதனால் சில மாற்றங்கள் ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பதவி உயர்வு போன்ற நல்ல மாற்றங்களாகவும் இருக்கலாம். அல்லது பணியிடத்தில் சிக்கல் போன்ற பிரச்சினைகளாகவும் இருக்கலாம். 12க்கு அதிபதியான சந்திரன் லாப ஸ்தானமான 11 ல் அமர்வதால் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். கூடுமானவரை சிக்கனமாக இருக்க முயற்சிப்பது நல்லது.

மாணவர்களுக்கு சனியும் செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் உடல்நல பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது அதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

இந்த வருடம் வெற்றிகள் பெற நினைத்தால் சுறுசுறுப்புடன் எதிலும் செயல்படுங்கள், சோம்பலை தவிர்த்திடுங்கள். கூடுதல் பலன்களுக்கு எல்லை தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.

Published by
Aadhi Devan

Recent Posts